நீலகிரியில் கோடை சீசனில் சமூக சேவை பணியாற்றிய சமூக ஆர்வலர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனின் போது, சமூக சேவை பணியாற்றிய சமூக ஆர்வலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனின் போது, சமூக சேவை பணியாற்றிய சமூக ஆர்வலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். 

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மே மாதம் கோடை சீசனை முன்னிட்டு பல்வேறு இடங்களில் காவல்துறை சார்பாக சுற்றுலாப் பயணிகளுக்கும், வாகனங்களுக்கும் இடையூறு இல்லாமல் பல்வேறு ஏற்பாடுகளை காவல்துறை செய்திருந்தது. குறிப்பாக, மலர் கண்காட்சி இந்த முறை ஐந்து நாட்கள் நடைபெற்றிருந்த நிலையில், அப்போது சமூக சேவை பணியாற்றிய சுமார் 18 பேர் அரசு தாவரவியல் பூங்கா மட்டுமல்லாமல், நகரில் பல்வேறு இடங்களில் வாகன நெரிசலை தவிர்க்க பெரிதும் உதவினர். 



இதையடுத்து, இந்த சமூக பணியில் பங்கேற்று பணியாற்றிய 18 சமூக ஆர்வலர்களுக்கு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும், இது போன்ற சமூகப் பணிகளில் இளைஞர்கள் அதிகமாகக் கலந்து கொண்டு மாவட்டத்திற்கு நற்பெயரை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா அவர்களிடம் வலியுறுத்தினார். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...