கோவை : கோவைபுதூர் அருகே தமிழ்நாடு சிறப்பு காவல் படை நான்காம் பட்டாலியனைச் சேர்ந்த 8 காவலர்கள் திடீரென மர்ம காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டதால், அவர்கள் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவைபுதூர் அருகே தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் நான்காம் பட்டாலியன் குடியிருப்பு உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட காவலர்கள் உள்ளனர். இதில், இவர்களுக்கு ஆறு மாத சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்தக் குழுவில் உள்ள காவலர்களுக்கு திடீரென காய்ச்சல் பரவியது. இதில், 25 பேர் பாதிக்கப்பட்டனர். முதலில் நேற்று 10 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பின்னர், இன்று 15 பேர் சிகிச்சை பெற்றனர்.
அவர்களில், நந்தகுமார் (24), செல்வர் சுந்தரம் (28), கருப்புசாமி (23), செல்வகுமார் (26), அலெக்ஸ் (24), மணிகண்டன் (29), தீனதயாளன் (27), அறிவழகன் (25) ஆகிய 8 பேர் காய்ச்சல் சிறப்புப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ரத்தப் பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.