திருப்பூரில் இளைஞர் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய காவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முற்றுகை

திருப்பூர் : எந்தவித காரணமும் இல்லாமல் இளைஞரை கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதுடன், பெண்களை தரக்குறைவாக பேசிய காவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு புகார் அளித்தனர்.

திருப்பூர் : எந்தவித காரணமும் இல்லாமல் இளைஞரை கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதுடன், பெண்களை தரக்குறைவாக பேசிய காவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு புகார் அளித்தனர். 



திருப்பூர் பலவஞ்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் தனியார் பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்றைய தினம் பணிமுடிந்து இரவு வீட்டருகே சரவணன் நின்று கொண்டிருந்த போது, அவ்வழியே ரோந்து வந்த வீரபாண்டி காவல்நிலைய காவலர் கெளரிசங்கர் என்பவர், சரவணனை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இதனை எதிர்த்து கேட்டதால் கையில் வைத்திருந்த லத்தியால் கடுமையாக தாக்கியதாகவும், இதில் சரவணனுக்கு இடுப்பு, கை பகுதிகளில் பலத்த காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. 



இதனையடுத்து, அப்பகுதியினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும்போது திரும்ப வந்த காவலர் மீண்டும் தாக்கியதோடு, அங்கிருந்த பெண்களையும் தரக்குறைவாக பேசியதாகவும் அப்பகுதியினர் தெரிவித்தனர். 

எந்தவித காரணமும் இல்லாமல் இளைஞரை தாக்கியதுடன், பெண்களையும் தரக்குறைவாக பேசிய காவலர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சரவணனின் பெற்றோர் உட்பட அப்பகுதியினர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். காயமடைந்த சரவணன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...