பல்லடம் அருகே குழந்தையின் உடல் புதைக்கப்பட்டதாக வதந்தி : தோண்டிப்பார்த்த போது இறந்த வளர்ப்பு நாயின் உடல் கண்டெடுப்பு

திருப்பூர் : பல்லடம் அருகே குழந்தையின் உடல் புதைக்கப்பட்டதாக வெளியான தகவலையடுத்து, போலீசார் தோண்டிப் பார்த்த போது, இறந்த வளர்ப்பு நாயின் உடல் கண்டெடுக்கப்பட்டதால் பதற்றம் நீங்கியது.

திருப்பூர் : பல்லடம் அருகே குழந்தையின் உடல் புதைக்கப்பட்டதாக வெளியான தகவலையடுத்து, போலீசார் தோண்டிப் பார்த்த போது, இறந்த வளர்ப்பு நாயின் உடல் கண்டெடுக்கப்பட்டதால் பதற்றம் நீங்கியது. 



திருப்பூர் மாவட்டம் பல்லடத்தையடுத்த கள்ளிமேடு பகுதியில் பயன்பாடற்ற பாறைக்குழி அருகே இயற்கை உபாதை கழிக்கச் சென்ற சிலர் அங்கு புதிதாக தோண்டி மூடப்பட்ட சிறிய மண் திட்டைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மண் மேட்டில் இறந்தவர்களுக்குப் படையல் வைப்பது போன்று பிஸ்கெட் பாக்கெட்டும் கிடந்ததால் குழந்தை புதைக்கப்பட்டிருக்கலாம் என பரபரப்பு தொற்றிக் கொண்டது. இதையடுத்து. அப்பகுதியினர் இச்சம்பவம் குறித்து பல்லடம் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.



இதனையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் முன்னிலையில் சிறிய மண்மேட்டை தோண்டிப் பார்த்தனர்.அப்போது அந்தக் குழிக்குள் வீட்டில் நோய்வாய்ப்பட்டு இறந்த வளர்ப்பு நாய் ஒன்றின் உடலை வளர்த்தவர்களே கொண்டு வந்து இங்கு புதைத்துள்ளதும் நாய்க்குப் பிடித்தமான பிஸ்க்கெட் பாக்கெட்டை குழி மேட்டில் வைத்துச் சென்றதும் விசாரணையில் தெரிய வந்தது. இதனால் ஏற்பட்ட பரபரப்பு விலகி போலீசாரும், பொதுமக்களும் நிம்மதியடைந்தனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...