ஜுன் 25-ம் தேதி புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையின் நகல் எரிப்பு போராட்டம் : இந்திய மாணவர் சங்கம் அறிவிப்பு

கோவை : இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கை இருப்பதாகக் கூறி வரும் 25-ம் தேதி நகல் எரிப்பு போராட்டம் நடைபெற இருப்பதாக இந்திய மாணவர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

கோவை : இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கை இருப்பதாகக் கூறி வரும் 25-ம் தேதி நகல் எரிப்பு போராட்டம் நடைபெற இருப்பதாக இந்திய மாணவர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். 

இது தொடர்பாக இந்திய மாணவர் சங்கத்தின் கோவை மாவட்டக்குழு அலுவலகத்தில் தமிழ் மாநில செயலாளர் வி. மாரியப்பன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :- புதிய கல்வி கொள்கை குறித்து கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு தயாரித்த வரைவு நகலை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ளது. இது குறித்த கருத்தை ஜூன் மாதம் 30-ம் தேதிக்குள் பொதுமக்கள் கருத்து தெரிவிக்க வேண்டும் என்கிற கால அவகாசத்தை வழங்கியுள்ளது. ஒன்றரை ஆண்டுகள் தயாரித்த 484 பக்க அறிக்கையின் மீது ஒரு மாத காலத்திற்குக் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று சொல்வதே அபத்தமாகும்.

மேலும், இந்த அறிக்கை இந்தி, ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இதுவே ஜனநாயகத்திற்கு முரண்பட்டதாகும். அனைத்து மொழிகளிலும் இந்த அறிக்கையை மொழிபெயர்த்து வெளியிட வேண்டும். கருத்தைப் பதிவு செய்யும் கால அவகாசத்தை ஆறு மாதங்கள் நீட்டித்து வழங்க வேண்டும். நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் கல்வித்துறையில் அறிவியல் பூர்வமான கல்வியைக் கொடுக்காமல், இந்தியை திணித்து மாநில உரிமையை பறித்து, தாய்மொழி கல்வியை ஒழித்து தனியார் கார்ப்பரேட்டுகளிடம் கல்வியை தாரைவார்ப்பது என்பதை இந்திய மாணவர் சங்கம் ஒருபோதும் ஏற்காது. 

தமிழக அரசு உடனடியாக சட்டமன்றத்தைக் கூட்டி புதிய கல்வி கொள்கை குறித்து விவாதிக்க வேண்டும். அனைவரது கருத்தையும் அறிய வேண்டும். இதன்பின்னரே, இவ்வறிக்கையின் மீது தமிழக அரசு முடிவு செய்ய வேண்டும். அதேநேரத்தில், இந்த புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கை சமூகநீதி, கூட்டாட்சி தத்துவம், மக்களாட்சி மாண்புகளுக்கு எதிராகவும், இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக முன்மொழியப்பட்டுள்ளதாலும், ஏழை எளிய மாணவர்களின் நலனுக்கு எதிரானது என்பதால் மத்திய அரசு இதனை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்பதை இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்துகிறது. 

இந்த கல்விக்கொள்கையின் அபாயம் குறித்து அனைத்து தரப்பு மாணவர்களிடமும் கொண்டு சேர்க்கும் வகையில் ஜூன் 25-ம் தேதி நாடு முழுவதும் புதிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கை நகலை எரிக்கும் போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கம் ஈடுபட உள்ளது. இதன் ஒருபகுதியாக, தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களின் முன்பும் நகல் எரிக்கும் போராட்டத்தில் மாணவர் சங்கம் ஈடுபடும். மாணவர்களின் நலனில் உள்ள அக்கறையின்பால் இந்திய மாணவர் சங்கம் எடுக்கும் இந்த போராட்டத்திற்கு தமிழக மக்கள் ஆதரவு தருகிற வகையில், ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் இந்த அறிக்கையின் நகல் ஒன்றின் ஒரு பக்கத்தை எரித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம், என தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது, இந்திய மாணவர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் காவ்யா, மாவட்ட செயலாளர் தினேஷ் மற்றும் மாணவர் சங்க அனைத்து கல்லூரி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...