பருவமழை தாமதம்: சரிவை நோக்கி பில்லூர் அணை; தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை

கோவை : பருவமழை தவறியதால் மேட்டுப்பாளையம் பில்லூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சந்தித்து வரும் நிலையில், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.


கோவை : பருவமழை தாமதமானதால் மேட்டுப்பாளையம் பில்லூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சந்தித்து வரும் நிலையில், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். 



கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை நடுவே கேரள காடுகளை ஒட்டி அமைந்துள்ளது மேட்டுப்பாளையம் பில்லூர் அணை. நீலகிரி காடுகள் மற்றும் கேரள காடுகளில் பெய்யும் மழை நீரினையும், ஓடைகளையும் ஆதாரமாகக் கொண்டு விளங்கும் இந்த பில்லூர் அணையானது கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்ட மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது. இந்த அணையில் இருந்து வெளியேற்றப்படும் பவானி ஆற்று நீரினை நம்பி சுமார் 20-க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

பில்லூர் அணையைப் பொறுத்தவரை சிறுவாணி மற்றும் பவானி ஆறுகள் ஒன்றிணைந்து மேட்டுப்பாளையம் எல்லையான கூடப்பட்டி என்னும் இடத்தில் சங்கமித்து, பின்னர் பில்லூர் அணையை அடையும். கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியவுடன், பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து ஜூன் மாதத்தில் அணை நிரம்பும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்தபடி, தென்மேற்கு பருவமழை பெய்யாமல் தவறி போனதால், பில்லூர் அணைக்கான நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. 



பில்லூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்ட பகுதிகளில் மற்றும் கேரளாவின் அட்டப்பாடி போன்ற பகுதிகளில் இதுவரை பருவமழை சீராக பெய்யாமல் தாமதமானதால், பவானி ஆற்றில் நீர் வரத்தானது வெகுவாக குறைந்து, 100 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 75 அடியாக சரிந்துள்ளது. 

மேலும், அணைக்கு நீர்வரத்தானது 200 அடியாக உள்ளது. அணையின் முழு கொள்ளளவான 100 அடியில் சுமார் 40 அடி வரை சேறும் சகதியும் படிந்துள்ளதால், அணையின் நீர் இருப்பு 35 அடியாகவே கருதப்படுகிறது. மேலும், கடந்த ஒரு வாரமாக அணைக்கான நீர்வரத்து முற்றிலும் தடைபட்டதால் அணைக்கான நீர்வரத்து முடங்கியுள்ளது. எனவே, இம்மாதம் எதிர்பார்த்தபடி, தென்மேற்கு பருவமழை பெய்யாமல் போனால், அணையின் நீர்மட்டம் மேலும் குறைய வாய்ப்புள்ளது. 

இதனால், கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கடுமையான குடிநீர் பிரச்சனை சந்திக்க நேரிடும். மேலும், பவானி ஆற்று நீரினை ஆதாரமாகக் கொண்ட 20-க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்கள் முடங்கும் நிலை உருவாகியுள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...