கோவை : குடிநீர் விநியோகம் தொடர்பாக 7 மாவட்ட அதிகாரிகளுடன் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் கோவையில் ஆய்வு கூட்டம் நடத்தினார்.
கோவை : குடிநீர் விநியோகம் தொடர்பாக 7 மாவட்ட அதிகாரிகளுடன் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் கோவையில் ஆய்வு கூட்டம் நடத்தினார்.

கோடை காலம் முடிந்த நிலையிலும் தமிழகத்தில் குடிநீர் பிரச்சனை தலைவிரித்து ஆடுகிறது. இது தொடர்பாக எதிர்கட்சிகள் சார்பாக போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், குடிநீர் விநியோகம் தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் மககேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில், தற்போதைய குடிநீர் இருப்பு நிலை, அதை விநியோகிக்கும் முறைகள், குடிநீர் தேவை உள்ள பகுதிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறதா என்பது குறித்து கீழ்மட்ட நிலை வரையில் சென்று ஆய்வு செய்திட வேண்டும் எனவும் இக்கூட்டத்தில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், முதற்கட்டமாக ஏழு மாவட்ட குடிநீர் மேம்பாடு பணிக்காக 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.