கோவை : புயல் மற்றும் காற்றின் வேகத்தால் தள்ளிப்போன பருவமழை சீராக துவங்கும் என்றும், தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு ஏற்படும் என கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கல்யாண சுந்தரம் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே இராமம்பாளையம் பகுதியில செயல்படும் (பாரத் வித்யா நிகேதன் ) தனியார் பள்ளியின் முதலாம் ஆண்டு விழா நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கல்யாணசுந்தரம் பள்ளியில் முதல் மதிப்பெண்கள் பெற்ற குழந்தைகளுக்கு பள்ளி சார்பில் தங்கநாணயங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த துணைவேந்தர் கல்யாண சுந்தரம் கூறியதாவது :- தற்போது சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்சனை கடுமையாக உள்ளது.

மக்கள் தண்ணீர் இன்றி தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வாக தென்மேற்கு பருவமழை கை கொடுக்கும் என மக்கள் எதிர்பார்த்த நிலையில், மழை வராமல் பொய்த்து போனதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இது குறித்து வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தியது. புயல் மற்றும் காற்றின் வேகம் காரணமாகவே பருவமழை தள்ளி போயிருக்கிறது. இம்மாதம் பொழிய வேண்டிய பருவ மழை சற்று நீண்டு தள்ளி போயிருந்தாலும், விரைவில் பருவமழை சீராக தொடங்க உள்ளது. எதிர்பார்த்த மழை அளவு இருக்கும் என ஆய்வுகள் மூலம் கணிக்கபட்டுள்ளது. மழையால் அணைகள், ஏரிகள், குளங்கள் என நீர் நிலைகளில் தண்ணீர் பெருகும். என கூறினார். எனவே, மக்கள் தண்ணீர் பிரச்சனை குறித்து அச்சப்பட தேவையில்லை
இருப்பினும், வேளாண்மை உள்ளிட்ட பிரிவுகளில் நீர் மேலாண்மையில் நாம் அதிக முக்கியத்துவம் எடுத்து, எதிர்வரும் காலங்களில் நவீன முறையில் நீர் மேலாண்மை விவசாயம் செய்வதுடன், தற்போது விவசாய முறைகளில் சொட்டு நீர் பாசனம் போன்ற திட்டங்களை தமிழக வேளாண்மை துறை தொடர்ந்து செயல்படுத்தி வருவதுடன் அவற்றுக்கு அரசு மூலம் மானியம் அளிக்கப்பட்டு வருகிறது. பயிர் சாகுபாடி முறையில் வறட்சியை தாங்கக் கூடிய பயிர் ரகங்களை காலத்திற்கு தகுந்தவாறு விவசாயிகளிடையே மாற்றங்கள் தேவை. கடந்தாண்டை விட நடப்பாண்டில் வேளாண்மை படிப்புகளில் சேர 7,000 மாணவர்கள் கூடுதலாக விண்ணபித்துள்ளனர். தற்போது, 52,000 மாணவர்கள் இளங்கலை வேளாண் படிப்பிற்கு விண்ணபத்துள்ளனர். இதில், மாணவிகள் அதிகமானோர் விண்ணபித்துள்ளனர். இது இளைய சமுதாயம் விவசாய பணிகளை மேற்கொள்ள ஆயத்தமாகி இருப்பதை உணர்த்துகிறது. இதனை வரவேற்கிறேன். விரைவில் வேளாண்மை பல்கலைக்கழக ரேண்டம் எண் ஜூன் 27ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது, என அவர் தெரிவித்தார்.