அரசுப் பள்ளி மாணவர்கள் இருபிரிவாகப் பிரிந்து தாக்குதல் : திருப்பூர் போலீசார் விசாரணை

திருப்பூர் : திருப்பூரில் அரசுப் பள்ளி மாணவர்கள் இருபிரிவாக பிரிந்து தாக்கிக் கொண்ட சம்பவத்தில், மாணவர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ள நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் : திருப்பூரில் அரசுப் பள்ளி மாணவர்கள் இருபிரிவாக பிரிந்து தாக்கிக் கொண்ட சம்பவத்தில், மாணவர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ள நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

திருப்பூர் நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் திருப்பூர் குமரன் சாலையில் உள்ள டவுன்ஹால் பேருந்து நிறுத்தத்தில் இருந்தே தினந்தோறும் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று வழக்கம்போல, பேருந்து நிறுத்தம் அருகே பள்ளி மாணவர்கள் இரு பிரிவினராகப் பிரிந்து கற்கள் மற்றும் ரீப்பர் கட்டைகளைக் கொண்டு தாக்கிக் கொண்டனர். 



இந்த தாக்குதலில் அரசுப் பள்ளியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் கெளதம் தலையில் பலத்த ஏற்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவர்களை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...