நீலகிரி : குன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1428-ம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1428-ம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயத்தில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர், ரூ. 3 லட்சத்து 12 ஆயிரம் முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையினையும், முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை தலா ஒரு பயனாளிக்கு ரூபாய் 22 ஆயிரத்து ஐநூறு வீதம், 10 பயனாளிகளுக்கு ரூபாய் 2 லட்சத்து 25 ஆயிரத்திற்கான காசோலையினையும், திருமண உதவித்தொகையாக 4 பயனாளிகளுக்கு ரூபாய் 18 ஆயிரத்திற்கான காசோலையினையும், மருத்துவ இயலாமை உதவித்தொகை, பழங்குடியின பயனாளிகளுக்கு சாதி சான்றிதழ்கள், விவசாயம் மற்றும் தோட்டக்கலைத்துறையின் சார்பில் உதவி பெற 9 பயனாளிகளுக்கு அனுபோக சான்றினையும், 10 பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகளையும் வழங்கினார்.
பின்னர், முதியோர் உதவித்தொகை, ஈமச்சடங்கு உதவி தொகை, சாலைவசதி, பேருந்து வசதி, குடிநீர் வசதி ஆகிய கோரிக்கைகளைக் குறித்த 230 மனுக்கள் பெறப்பட்டது. சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக பரிசீலனை செய்து தகுதி இருப்பின் விரைவில் முடித்துக் கொடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டார்.
இந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் (கலால்) பாபு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முகமது குதுரதுல்லா, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மணிவேலன், மாவட்ட வழங்கல் அலுவலர் கணேஷ், குன்னூர் வட்டாட்சியர் தினேஷ்குமார், அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.