நீலகிரி : இயற்கையைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலான கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு வண்ண ஓவியங்கள் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

உதகையில் இயங்கி வரும் மெக்கன்ஸ் கட்டிடக் கலைக் கல்லூரி சார்பாக இயற்கையைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்துவதோடு, உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடையே சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்து வகையில், தொட்டபெட்டா காட்சி முனை சாலையின் தடுப்பு சுவர்களில் ஓவியங்கள் வரைந்து அசத்தி வருகின்றனர்.

இயற்கை அன்னையைப் பாதுகாக்க வேண்டும், நீலகிரியைப் பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் இந்த வண்ண ஓவியங்கள், அந்த சாலையில் பயணிப்பவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், நீலகிரியின் சிறப்புகளான நீலகிரி மலை ரயில், தேயிலை தோட்டம், ஆசிய யானைகள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் என பல்வேறு வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. தனியார் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், ஓவியர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் வரைந்துள்ள இந்த ஓவியங்கள் அனைவரின் சிந்தனையைத் தூண்டும் வகையில் உள்ளது.

கோத்தகிரி சாலையில் வரையப்பட்டுள்ளது போலவே, குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள தடுப்புச் சுவர்களில் இதுபோன்ற விழிப்புணர்வு ஓவியங்கள் வரைய வேண்டும் என்றும், இதில் போஸ்டர்கள் ஒட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.