நீலகிரி : குன்னூர் பேருந்து நிலையம் அருகில் ஓடும் ஆற்றினை தூய்மையாக வைக்கவும், மீறி குப்பைகளை கொட்டுபவர்கள் மீது அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

கிளீன் குன்னூர் அமைப்பு சார்பில் பேருந்து நிலையத்தில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் மற்றும் அங்கு படிந்திருந்த அழுக்குகளைத் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார்.
அப்போது ஆட்சியர் பேசியதாவது :- குன்னூர் மக்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வரப்பிரசாதம் இந்த ஆறு, இதனை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். மேலும், இவற்றில் குப்பைகள் மற்றும் கழிவுகளைக் கொட்டக் கூடாது. இந்த ஆற்று நீரை சமவெளிப் பகுதிகளில் குடிநீராகப் பயன்படுத்தி வருகின்றனர். ஆகவே, இந்த ஆற்றில் குப்பைகள் மற்றும் கழிவுகளைக் கொட்டினால், கண்காணிப்பு கேமராவின் பதிவைக் கொண்டு ரூ. 5,000 முதல் ரூ. 10, 000 வரை அபராதம் விதிக்கப்படுவதுடன், கடையின் உரிமம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என்றார்.
மேலும், ஆற்றை தூய்மை செய்த தனியார் தொண்டு நிறுவனத்துடன் சென்று ஆற்றுப்படுகையை பார்வையிட்ட ஆட்சியர், மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ள கடை உரிமையாளர்களிடம் கடைகளை நடைபாதையில் வைக்கக் கூடாது என்றும், மீறி வைத்தால் நகராட்சி சார்பில் அபராதம் விதிக்கப்படும், என எச்சரிக்கை விடுத்தார்.
இந்த நிகழ்ச்சியில், அரசு அதிகாரிகள், கிளீன் குன்னூர் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த சமந்தா, நிர்வாகிகள் டாக்டர் வசந்தன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர், வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜாமபந்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத் திட்டங்களை வழங்கினார்.