போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க குறிச்சி குளக்கரையில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க பரிந்துரை

கோவை : உக்கடம் பகுதியில் நிலவி வரும் கடுமையான போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க குறிச்சி குளக்கரையில் தற்காலிக பேருந்து நிலையத்தை அமைக்க கோவை மாநகர போக்குவரத்து போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.

கோவை : உக்கடம் பகுதியில் நிலவி வரும் கடுமையான போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க குறிச்சி குளக்கரையில் தற்காலிக பேருந்து நிலையத்தை அமைக்க கோவை மாநகர போக்குவரத்து போலீசார் பரிந்துரை செய்துள்ளனர். 

ஆத்துப்பாலம் - உக்கடம் மேம்பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால், பாலக்காடு சாலையில் உள்ள ஆத்துப்பாலம், குனியமுத்தூர், வாளையர் பகுதி மக்கள் மற்றும் பொள்ளாச்சி சாலையில் உள்ள குறிச்சி, சுந்தராபுரம், ஈச்சனாரி, மலுமிச்சம்பட்டி பகுதிகளில் வசிப்பவர்களும் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர். மேலும், வாகன ஓட்டிகள் உரிய நேரத்தில் சென்று சேர வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

குறிப்பாக, பேருந்துகள் புட்டு விக்கி அல்லது நஞ்சுண்டாபுரம் வழியாக திருப்பிவிடப்பட்டு இயக்கப்படுகிறது. மேலும், பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு சாலை வழியாக வெளியூர்களுக்குச் செல்லும் பேருந்துகள், நஞ்சுண்டாபுரம் மற்றும் புட்டுவிக்கி வழியாக திருப்பிடப்படுவதால், பயண நேரமும், தூரமும் அதிகரித்துள்ளது. தற்போது, போக்குவரத்து நெரிசலை தவிர்த்து, மாற்றுப் பாதைகளை எளிதாக்க திட்டமிடப்பட்டுள்ளது. 



இது தொடர்பாக கோவை மாநகர துணை ஆணையர் (போக்குவரத்து) பி. பெருமாள் கூறுகையில், "பொள்ளாச்சி சாலையை ஒட்டியுள்ள குறிச்சி குளக்கரையின் கிழக்குப் பகுதியில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பகுதி சுமார் 800 மீ. தூரம் கொண்டதாக இருக்கும். தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்படுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள பகுதியை உயர் அதிகாரிகள் சோதனை செய்த பிறகு, கோவை மாநகராட்சி, பொதுத்துறை, தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில போக்குவரத்துக் கழகத்திடம் பரிந்துரை செய்யப்படும். மேலும், நிழற்கூடாரம், கழிப்பறை, தெரு விளக்குகள், பாதுகாப்பு கேமிராக்கள் உள்ளிட்ட அடிப்படை தேவைகளையும் அமைக்க வலியுறுத்தப்படும். தற்போது, இந்தத் திட்டப் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது," என்றார். 

குறிச்சி குளப்பகுதியில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்படுவதால், போக்குவரத்து நெரிசலில் இருந்து வாகன ஓட்டிகள் தப்பிக்க முடியும். 

ஆத்துப்பாலம் - உக்கடம் மேம்பாலக் கட்டுமானப் பணிகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இந்த தற்காலிக பேருந்து நிலையம் மிகவும் உதவிகரமாக இருக்கும். இந்த மேம்பாலக் கட்டுமானப் பணிகள் முடியும் வரை, இந்த தற்காலிக பேருந்து நிலையம் பயன்படுத்தப்படும்," என்கிறார் மூத்த போலீஸ் அதிகாரி. 

இந்த தற்காலிக பேருந்து நிலையம் தொடர்பாக கோவை மாநகராட்சி ஆணையர் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதால், விரைவில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...