கோவை : கோவை மாவட்டத்திலுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களின் பயிற்சியாளர்களுக்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது :- மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் கோவை, அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்) கோவை மற்றும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ஆனைகட்டி ஆகியவற்றிற்கு ஆகஸ்;ட் 2019ம் கல்வியாண்டு பயிற்சியாளர்களின் கலந்தாய்வு சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் கடந்த 17-ம் தேதி முதல் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதில், கோவை, அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் எலக்ட்டிரிசன், எம்.எம்.வி. ஃபிட்டர், டர்னர், மெஷினிஸ்ட், வயர்மேன், வெல்டர் போன்ற பல்வேறு தொழிற்பிரிவுகளில் சேர்க்கை (ஆண், பெண்) இருபாலருக்கும் ஓராண்டு மற்றும் இரண்டாண்டு தொழிற்பிரிவுகளில் சேர்க்கை நடைபெற உள்ளது.
பயிற்சியில் சேர விரும்பும் பயிற்சியாளர்கள் அதற்கான விண்ணப்பத்தினை www.skilltraining.tn.gov.in என்கிற இணையதள முகவரியில் விபரங்கள் நேரடியாக வரும் 27-ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். அதனை செய்திட இயலாத விண்ணப்பதாரர்களின் நலன் கருதி மேற்கண்ட தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இலவசமாக பதிவேற்றம் செய்திட தக்கவழிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதற்கான பயிற்சிக்கட்டணம் முற்றிலும் இலவசம், அனைத்துப் பயிற்சியாளர்களுக்கும் இலவச பேருந்து பயண அட்டை, சீருடைகள், காலணிகள் மற்றும் வரைபடக் கருவிகள், என்.ஐ.எம்.ஐ. புத்தகம் அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது. பிரதி மாதமும் வருகையின் அடிப்படையில் கல்வி உதவித்தொகை அரசால் வழங்கப்படுகிறது. மேலும், தகுதியின் அடிப்படையில் விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி அரசால் வழங்கப்படுகிறது.
இதற்கான கல்வித்தகுதி தொழிற்பிரிவுகளைப் பொறுத்து 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பு, பழங்குடியினர் பயிற்சியாளர்களுக்கு இலவச உணவு வசதியுடன் தங்கும் விடுதி வழங்கப்படும். வயது வரம்பு 14 முதல் 40 வரை (மகளிர்க்கு உச்ச வயது வரம்பு இல்லை) இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்த அனைத்து பயிற்சியாளர்களுக்கும் வளாக நேர்காணல் மூலம் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற்று வழங்கப்படுகிறது, என தெரிவித்துள்ளார்.