டெல்லி : இந்தியாவில் நடைபெறும் சர்வதேச போட்டிகளில் பாகிஸ்தான் வீரர்களும் பங்கேற்கலாம் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரியில் புல்வாமா தாக்குதலைக் காரணம் காட்டி, துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தானைச் சேர்ந்த 3 பேருக்கு மத்திய அரசு விசா வழங்க மறுத்தது. அதன் எதிரொலியாக, இந்தியாவில் நடைபெறவிருந்த உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி, ஜூனியர் டேவிஸ் கோப்பை டென்னிஸ், ஃபெட் கோப்பை டென்னிஸ், ஆசிய ஜூனியர் மல்யுத்தம் உள்ளிட்ட போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு மத்திய அரசு ஒரு உத்தரவாதத்தை அளித்துள்ளது. அதில், பங்கேற்கத் தகுதி பெற்ற வீரர், வீராங்கனைகள் எந்த நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு விசா வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன்மூலம், இந்தியாவில் அடுத்த நடத்த திட்டமிடப்பட்டிருந்த சர்வதேச போட்டிகளுக்கான தடை நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பாகிஸ்தான் வீரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட மாட்டாது என்பது தெளிவாகியுள்ளது.