அன்னூரில் ஜமபந்திக் கூட்டத்தில் 71 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய கோவை ஆட்சியர்

கோவை : அன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயத்தில் பெறப்பட்ட 71 மனுதாரர்களுக்கு உடனடித் தீர்வாக மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கோவை : அன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயத்தில் பெறப்பட்ட 71 மனுதாரர்களுக்கு உடனடித் தீர்வாக மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நேற்று முதல் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெற்று வருகின்றது. அதன்படி, கோவை மாவட்டத்தின் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் அவை கொண்டுள்ள உள்வட்டங்களின் அடிப்படையில் கிராமங்களில் உள்ள பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அவற்றின் தகுதிகளின் அடிப்படையில் உடனடித் தீர்வு காணப்படுகின்றது. 

ஒவ்வொரு வட்டத்திலும் நடைபெறும் வருவாய் தீர்வாயத்தில் வருவாய் தீர்வாய அலுவலராக அன்னூர் வட்டத்திற்கு மாவட்ட ஆட்சியரும், மதுக்கரை வட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலரும், மேட்டுப்பாளையம் வட்டத்திற்கு கோயம்புத்தூர் வடக்கு வருவாய் கோட்டாட்சியரும், கோவை வடக்கு வட்டத்திற்கு, கோவை மாவட்ட ஆய்வுக்குழு அலுவலரும், சூலூர் வட்டத்திற்கு கோவை தெற்கு வருவாய் கோட்டாட்சியரும், பேரூர் வட்டத்திற்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரும், கிணத்துக்கடவு வட்டத்திற்கு பொள்ளாச்சி வருவாய் கோட்டாட்சியரும், பொள்ளாச்சி வட்டத்திற்கு மாவட்ட ஆதிதிரவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், ஆனைமலை வட்டத்திற்கு (சமூக பாதுகாப்புத்திட்டம்) தனித்துணை ஆட்சியரும், வால்பாறை வட்டத்திற்கு மாவட்ட மேலாளர் (தாட்கோ) ஆகியோர் வருவாய் தீர்வாய அலுவலர்களாக நியமிக்கப்பட்டு, மனுக்களின் மீது தீர்வு கண்டு வருகின்றனர். 



மேலும், அன்னூர் வட்டத்தில் நேற்று நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு, பெறப்பட்ட 476 மனுக்களில் பல்வேறு மனுக்களுக்கு உடனடித் தீர்வு கண்டும், பல்வேறு மனுக்களை மேல் நடவடிக்கைகளுக்கும் பரிந்துரைத்தார். அதன்படி, ஆய்வுக்குட்படுத்தப்பட்ட தகுதியான மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, உடனடித் தீர்வாக இன்று 18 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையினையும், ஒரு பயனாளிக்கு விலையில்லா சலவைப்பெட்டியும், 2 விவசாயிகளுக்கு சிறு, குறு விவசாயச் சான்றுகளும், 2 பயனாளிகளுக்கு வாரிசு சான்றுகளும், 26 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் சான்றும், 22 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளும் என மொத்தம் 71 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து, இன்று நடைபெறும் தீர்வாயத்தில் அன்னூர் வட்டத்தைச் சேர்ந்த பொகலூர், குப்பனூர், அக்கரை செங்கப்பள்ளி, ஒட்டர்பாளையம், கணுவக்கரை, ஆம்போதி, அல்லப்பாளையம், அன்னூர்-மேட்டுப்பாளையம், கஞ்சப்பள்ளி, வடக்கலூர், பசூர் ஆகிய 11 ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித் தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, விரைவு பட்டா மாற்றம், விலையில்லா வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி வழங்கப்பட்ட 647 மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் கு. ராசமணி, வருவாய் தீர்வாயத்தின் போது பெறப்படும் அனைத்து மனுக்கள் மீதும் தனிக்கவனம் செலுத்தி உடனடி தீர்வு காண தக்க நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலஅளவை) தவமணி, வட்டாட்சியர்கள் ஆர். வசந்தாமணி, முரளி, ரங்கராஜ், ராஜன் உள்ளிட்ட வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...