அனைத்து வார்டுகளிலும் சீரான குடிநீர் விநியோகம் : கோவை மாநகராட்சி ஆணையர் தகவல்

கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் சீரான குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித்துள்ளார்.

கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் சீரான குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு 265.70 எம்.எல்.டி குடிநீர் தேவைப்படுகிறது. தற்போது, சிறுவாணி அணைப் பகுதியில் மழைப்பொழிவு இல்லாத காரணத்தால் நீர்மட்டம் மிகவும் குறைந்து விட்டது. இருப்பினும், மாநகராட்சி பகுதிக்கு பில்லூர், பவானி மற்றும் ஆழியாறு திட்டங்களிலிருந்து தற்போது 181 எம்.எல்.டி. குடிநீர் பெறப்பட்டு விநியோகம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சிறுவாணி திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்த 24 வார்டுகளில் 17 வார்டுகளுக்கு பில்லூர் திட்டத்திலிருந்து ஏற்கனவே இணைக்கப்பட்ட குழாய்களின் மூலம் குடிநீர் விநியோகம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. குடிநீர் அனைத்து பகுதிகளுக்கும் பகிர்ந்து வழங்கப்படுவதால் தற்போதுள்ள குழாய்கள் மற்றும் மேல்நிலைத் தொட்டிகளில் உள்ள அளவினை பொறுத்து 20 வார்டுகளுக்கு 4 முதல் 6 நாட்கள் இடைவெளியில் 4 மணி நேரம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

37 வார்டு பகுதிகளில் 6 நாட்கள் இடைவெளியிலும், 43 வார்டுகளுக்கு 6 முதல் 8 நாட்கள் இடைவெளியிலும், 6 முதல் 8 மணி நேரம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் மாநகராட்சி பகுதியில் தற்போதுள்ள 2,042 ஆழ்குழாய் கிணற்றில் இருந்து குடிநீர் அல்லாத உபயோகங்களுக்கும் கிணற்று நீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் சாலை சீரமைப்பு பணி, புதிய திட்டக்குழாய்கள் பதிக்கும் பணியும் நடைபெற்று வருவதால், குழாய் உடைப்பு ஏற்படும் இடங்களில் தடையின்றி குடிநீர் லாரிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

மேற்படி, குடிநீர் விநியோகத்தினை கண்காணிக்க ஒவ்வொரு வார்டு பகுதிக்கும் ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டு குடிநீர் விநியோகத்தில் ஏற்படும் குறைபாடுகள் உடனுக்குடன் ஆணையர் அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டு, உடனடி தீர்வும் செய்திட சம்மந்தப்பட்ட அனைத்து பொறியாளர்களும் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். எனவே, கோவை மாநகராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு எதுவும் இல்லை, எனத் தெரிவித்துள்ளார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...