கோவையில் நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்த தொகையை முறையாக வழங்கக் கோரி ஓலா அலுவலகம் முற்றுகை

கோவை : நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்த தொகையை முறையாக வழங்கக் கோரி கோவையில் உள்ள ஓலா கார் நிறுவன அலுவலகத்தை ஒப்பந்ததாரர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை : நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்த தொகையை முறையாக வழங்கக் கோரி கோவையில் உள்ள ஓலா கார் நிறுவன அலுவலகத்தை ஒப்பந்ததாரர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஓலா கார் நிறுவனத்தின் கோவை கிளை ஆர்.எஸ். புரம் தபால் நிலையம் அருகில் இயங்கி வருகிறது. ஒப்பந்தத்தின் போது நிர்ணயிக்கப்பட்ட தொகையைக் குறைத்து வழங்க ஓலா நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனைக் கண்டித்து 100-க்கும் மேற்பட்ட ஓலா ஒப்பந்ததாரர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.



இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், "கோவை மாநகரில் 500-க்கும் மேற்பட்ட ஓலா கார் இயங்கி வருகிறது. இதில், ஒப்பந்த வாகனங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் இயங்கி வருகிறது. ஒப்பந்ததாரர்கள் நாள் ஒன்றுக்கு 900 ரூபாய் செலுத்தி வருகின்றனர். பயணிகள் வாடகையில் 25% கமிஷனாக வழங்கி வந்துள்ளனர். இந்த நிலையில், இவர்களுக்கு போனஸ் கமிஷனாக ரூ.3.50 காசுளில் இருந்து ரூ. 4 வரை ஓலா நிர்வாகம் வழங்கி வந்த நிலையில், தற்போது வெறும் 25 பைசா மட்டுமே வழங்க முடியும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஒப்பந்ததாரர்கள் முறையிட்டபோது சுமூக முடிவு எடுக்கப்படும் என நிர்வாகம் கூறியது. ஆனால், தற்போது வாக்குறுதியை மீறி 25 பைசா மட்டுமே வழங்க முடியும் என கூறுகின்றனர்," என்றனர்.

இதனை அடுத்து, அதிருப்தி அடைந்த ஒப்பந்ததாரர்கள், ஓலா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், ஓலா நிர்வாகம் கூறியதை நம்பி கடன் வாங்கி வாகனங்களை இயக்கியதாகவும், போதிய அளவு வருமானம் இல்லாவிட்டாலும் சொந்த தொழில் என்பதால் இதுவரை வாகனங்களை இயக்கி வந்ததாகக் கூறிய அவர்கள், இனிமேலும் நஷ்டத்தில் வாகனங்களை இயக்க முடியாத சூழல் உள்ளதாக தெரிவித்தனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...