ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அரசு முதியோர் இல்லத்தில் கோவை மாநகராட்சியர் நேரில் ஆய்வு

கோவை : ஆர்.எஸ்.புரம் பகுதியிலுள்ள மாநகராட்சி முதியோர் தங்கும் விடுதியில் அடிப்படை வசதிகள் சிறந்த முறையில் பராமரிக்கப்படுகிறதா..? என அங்கு தங்கியுள்ள முதியோர்களிடம் மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் நேரில் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.

கோவை : ஆர்.எஸ்.புரம் பகுதியிலுள்ள மாநகராட்சி முதியோர் தங்கும் விடுதியில் அடிப்படை வசதிகள் சிறந்த முறையில் பராமரிக்கப்படுகிறதா..? என அங்கு தங்கியுள்ள முதியோர்களிடம் மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் நேரில் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன் ஒரு பகுதியாக, ஆர்.எஸ்.புரம் பகுதியிலுள்ள மாநகராட்சி முதியோர் தங்கும் விடுதியில் அடிப்படை வசதிகள் முறையாக செய்து கொடுக்கப்படுகிறதா..? என அங்குள்ள முதியவர்களிடம் அவர் கேட்டறிந்தார்.

பின்னர், கோவை மாநகராட்சி உக்கடம் பெரியகுளத்தின் கரைகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டார். தொடர்ந்து, கோவை மாநகராட்சி வாலாங்குளம் பகுதியிலுள்ள மேம்பாலத்தின் அடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர், பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். 



இந்த ஆய்வின்போது, நகர்நல அலுவலர் மரு.கே. சந்தோஷ்குமார், மேற்கு மண்டல உதவி ஆணையர் செந்தில் குமார் ரத்தினம், மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர். 



Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...