கோவை மத்திய சிறையில் விசாரணை கைதி கண்ணாடி துகள்களை சாப்பிட்டு தற்கொலை முயற்சி

கோவை : கோவை மத்திய சிறையில் விசாரணை கைதி ஒருவர் கண்ணாடி துகள்களை உண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : கோவை மத்திய சிறையில் விசாரணை கைதி ஒருவர் கண்ணாடி துகள்களை உண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதியில் உள்ள சேக்கிழார் வீதியைச் சேர்ந்த துரைசாமி என்பவரின் மகன் பிரகாஷ் (57). இவர் கடந்த மார்ச் மாதம் 23-ம் 294 (b) 506 (1) மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், நேற்று பிரகாஷ் சிறையில் கிடைத்த கண்ணாடித் துண்டுகளை உண்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார். 



இதையடுத்து, தகவலறிந்த சிறைத்துறையினர் உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். இவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்ததையடுத்து, நேற்று மாலையே சிறைவாசிகள் சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். இதனிடையே, சிறைவாசிக்கு எப்படி கண்ணாடி துகள்கள் கிடைத்தது என சிறைத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒவ்வொரு மத்திய சிறையிலும் காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் விஜிலன்ஸ் போலீஸார் செயல்படுவர். ஆனால், கோவை மத்திய சிறையில் தற்போது விஜிலென்ஸ் போலீசார் இல்லை என்ற தகவல் வெளியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, சிறை வார்டன்கள் தான் அந்த பணியை பார்ப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், சிறைக்குள் நடைபெறும் சம்பவங்கள் ஏதும் அரசின் கவனத்திற்கு அல்லது பொது வெளிக்கு வராமல் மறைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...