கடிகாரத்தின் மூலம் தமிழை வளர்க்கும் முதியவர் : குணமறிந்து கருணாநிதி பாராட்டியதே மகிழ்ச்சியான தருணம் என பெருமிதம்

கோவை : தமிழ் மொழியைப் பாதுகாக்கும் முயற்சியாக, தமிழ் மொழியை எண்களாகக் கொண்டு கடிகாரங்களை உருவாக்கி, அதனை தமிழ் அறிவு மிக்கவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கி வரும் கோவையைச் சேர்ந்த மாரியப்பன் குறித்த ஒரு சிறு பார்வை...!

கோவை : தமிழ் மொழியைப் பாதுகாக்கும் முயற்சியாக, தமிழ் மொழியை எண்களாகக் கொண்டு கடிகாரங்களை உருவாக்கி, அதனை தமிழ் அறிவு மிக்கவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கி வரும் கோவையைச் சேர்ந்த மாரியப்பன் குறித்த ஒரு சிறு பார்வை...!

கோவை பட்டணம்புதூர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் (82). 



தமிழ்மொழி எண்கள் கொண்ட கடிகாரங்களை உருவாக்கி அன்பளிப்பாக வழங்கி வருகிறார். இது குறித்த தகவல் அறிந்து ஒலம்பஸ் பகுதியில் பந்தல் அமைக்கும் கடையில் பணிபுரிந்து வரும் அவரை சந்திக்க சென்ற போது, முண்டாசு பனியன் அணிந்து சாதாரணமாக இருந்த அவர் அன்புடன் வரவேற்றார்.

பின்னர் நம்மிடம் அவர் பேசியதாவது :- கடந்த 8 ஆண்டுகளாக சுவர் கடிகாரங்களில் தமிழ் எழுத்துகள் பொறித்து, அதனை அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வழங்கி வருகிறேன். தற்போதைய சந்தையில் பல விதமான வண்ண கடிகாரங்கள் வந்துவிட்டன. விருப்பத்திற்கு ஏற்ப மக்கள் வாங்கிக் கொண்டு தான் இருக்கிறேன். வழக்கமாக உள்ள கடிகாரங்களில் 1 முதல் 12 வரையிலான எண்களைக் கொண்டுள்ளது. ரோமானிய எழுத்துக்கள் உள்ளபடியும் கடிகாரங்கள் இருக்கும். ஆனால், தமிழ் மொழியைப் பாதுகாக்கும் வகையில் நேரத்தை காட்டும் கடிகாரங்களை உருவாக்கியுள்ளேன். இதுவரை 96 கடிகாரங்களை உருவாக்கி உள்ளேன், என்றார். 



கடிகாரங்களில் தமிழ் எண்களை புகுத்தி உள்ள மாரியப்பன், கடிகாரங்களில் க (1), உ(2) என துவங்கி கஉ என்றால் (12) என்ற முறையில் பதித்து உள்ளார். 

இந்த கடிகாரங்களில்...

1) அன்னையவள் தமிழ்த்தாய் ஈன்றெடுத்த செல்வம் இரண்டு. ஒன்று மகிழ்ச்சியாக உள்ளது. மற்றொன்று மயக்க நிலையில் உள்ளது. தட்டி எழுப்புவது யார்..?, வெளி உலகை காட்டுவது யார்...?

2) தமிழுக்கு அரணாக விளங்குவது ஆறு, தெளிவாகக் கூறுவது யாரு..?, பரிசை பெறுவது யாரு..?.

3) அய்யன் திருவள்ளுவர் எந்த ஆண்டில் பிறந்தார். எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்..? எந்த ஆண்டுகள் வாழ்ந்தார்..? 

போன்ற வாக்கியங்கள் பொறிக்கப்பட்டு உள்ளது. 



இந்த கேள்விகளுக்கு சரியான பதில் கூறுபவர்களுக்கு இந்த கடிகாரங்களைப் பரிசாக வழங்கி வருவதை வழக்கமாக வைத்துள்ளார் மாரியப்பன். தமிழை வளர்ப்பதற்காகவே இதனை தொடர்ந்து செய்து வருவதாகக் கூறுகிறார். அதிலும், இவை விற்பனைக்கு அல்ல என அவர் கூறுவதுதான் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மேலும், பந்தல் அமைக்கும் பணியை மேற்கொண்டு வரும் மாரியப்பனுக்கு வருமானம் என்பது எவ்வளவு இருக்கும் என்பதை நம்மால் எளிதில் கணிக்க முடியும். அத்தகையை வருமானத்தைக் கொண்டு, கடிகார பாகங்களை வாங்கி, தமிழ் எண்களையும், புதிர்களையும் பதித்து இதனை செய்து வருகிறார்.



மேலும், "தமிழில் பேசுவதோடு மட்டுமல்லாமல் தமிழ் எழுத்துக்கள், எண்களை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்பதே தனது ஆசை. உயிருள்ள வரை இப்பணியை தொடர்ந்து செய்வேன்," என்கிறார் மாரியப்பன்.

இவ்வாறு உருவாக்கப்பட்ட கடிகாரங்களை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு வழங்கி உள்ளார். தமிழக முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி வாழ்த்தியதே தனது வாழ்வின் மகிழ்ச்சியான தருணம் என்றார். 

தொடர்ந்து, அவரிடம் இருந்து விடைபெற்றபோது, "தமிழில் பேசுவதையே கவுரவக் குறைச்சலாக இப்போது உள்ள சந்ததியினர் நினைக்கின்றனர். தமிழை காக்க என்னுடைய சிறு முயற்சிக்கு ஆதரவளிக்கும் உங்களுக்கு நன்றி," என அவர் கண்கலங்கிய நிலையில், கனத்த இதயத்துடன் அங்கிருந்து விடை பெற்றோம்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...