சென்னை : மக்களவை தேர்தலில் தன் மீது ஊழல் குற்றச்சாட்டுச் சுமத்தி ஸ்டாலின் பிரச்சாரம் செய்வதற்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திரும்பப் பெற்றார்.
சென்னை : மக்களவை தேர்தலில் தன் மீது ஊழல் குற்றச்சாட்டுச் சுமத்தி ஸ்டாலின் பிரச்சாரம் செய்வதற்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திரும்பப் பெற்றார்.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் உள்கட்டமைப்புப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு வழங்குவதாகவும், உள்ளாட்சி அமைப்புகளில் ஊழல் திளைத்துக் கொண்டிருப்பதால் உள்ளாட்சித் துறை அமைச்சரான எஸ்.பி. வேலுமணி பதவி விலக வேண்டும் என்று மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பேசி வந்தார். தன்னை அவமதிக்கும் விதமாக இதுபோன்று பேச ஸ்டாலினுக்கு தடை விதிக்க வேண்டும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆர். சுப்பிரமணியம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டாலினுக்கு எதிராக தொடர்ந்த வழக்கை திரும்பப் பெறுவதாக அமைச்சர் வேலுமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.