கோவையில் முழுவீச்சில் நடக்கும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி : அடுத்ததாக முத்தண்ணன் குளம்..!

கோவை: கோவையில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் கோவை மாநகராட்டி நிர்வாகம் மும்முரம் காட்டி வரும் நிலையில், அடுத்ததாக முத்தண்ணன் குள ஆக்கிரமிப்புகளை அகற்ற திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


கோவை: கோவையில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் கோவை மாநகராட்டி நிர்வாகம் மும்முரம் காட்டி வரும் நிலையில், அடுத்ததாக முத்தண்ணன் குள ஆக்கிரமிப்புகளை அகற்ற திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கோவை மாநகராட்சிக்குட்பட்ட குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ள குடியிருப்புகளை அகற்றும் பணிகளை கடந்த 2 ஆண்டுகளாக கோவை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், விரைவில் முத்தண்ணன் குள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சில குடியிருப்புகள் அகற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, எஞ்சிய வீடுகளை பல்வேறு கட்டங்களாக அகற்ற முடிவு செய்யப்பட்டது. மேலும், விரைவில் ஆக்கிரமிப்புகளில் இருப்பவர்களுக்கு, ஒதுக்கப்பட்டு குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளுக்கு இடம்பெயருமாறு நோட்டீஸ் அளிக்கப்பட உள்ளது.



ஆக்கிரமிப்புகளை அகற்றி வெளியேற்றப்படும் பொதுமக்களுக்கு மலுமிச்சம்பட்டி, கோவைபுதூர் மற்றும் கீரணத்தம் ஆகிய பகுதிகளில் தமிழக குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்டுள்ள வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

வெள்ளலூர் தொட்டி, பேரூர் பெரிய குளம், ராஜவாய்க்கால் மற்றும் உக்கடம் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் ஏற்கனவே வெற்றிகரமாக அகற்றப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...