ஜீவா நகர் குடியிருப்புக்கு வழங்கப்பட்டு வந்த மின் இணைப்பு துண்டிப்பு: கோவை மாநகராட்சி முதற்கட்ட நடவடிக்கை

கோவை : கோவை மாநகராட்சியின் வேண்டுகோளினை ஏற்று, கவுண்டம்பாளையம் அருகே உள்ள ஜீவா நகர் குடியிருப்புகளுக்கான மின்சாரத்தை மின்சார வாரிய ஊழியர்கள் நேற்று துண்டித்தனர்.


கோவை : கோவை மாநகராட்சியின் வேண்டுகோளினை ஏற்று, கவுண்டம்பாளையம் அருகே உள்ள ஜீவா நகர் குடியிருப்புகளுக்கான மின்சாரத்தை மின்சார வாரிய ஊழியர்கள் நேற்று துண்டித்தனர். 



கோவை மேட்டுப்பாளையம் சாலை அருகே உள்ள ஜீவா நகரில் கடந்த 40 ஆண்டுகளாக ஐநூறுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடியிருப்புவாசிகளுக்கு கீரணத்தம் அருகே குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள வீடுகளை காலி செய்து விட்டு கீரணத்தத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வீடுகளுக்கு இடம்பெயருமாறு கோவை மாநகராட்சி கால அவகாசம் கொடுத்திருந்தது. 

இருப்பினும், கடந்த பிப்ரவரி மாதம் ஜீவா நகரில் இருக்கும் வீடுகளை அப்புறப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், வீடுகளை அப்புறப்படுத்தும் பணிகளைக் கோவை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சியின் வேண்டுகோளினை ஏற்று, ஜீவா நகர் குடியிருப்புகளுக்கான மின்சாரத்தை மின்சார வாரிய ஊழியர்கள் நேற்று துண்டித்தனர். 



இது தொடர்பாக கோவை மாநகராட்சியின் துணை ஆணையர் பிரசன்ன ராமசாமி கூறுகையில், "கோவை மாநகராட்சி நிர்வாகம் உயர்நீதிமன்றத்தின் உத்தரவைத் தான் அமல்படுத்தி வருகிறது. இல்லையெனில், நீதிமன்ற அவமதிப்பாகிவிடும். குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கீரணத்தம் பகுதியில் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள குடியிருப்புகளுக்கு இடம்பெயர ஜீவா நகர் குடியிருப்புவாசிகளுக்கு போதிய அவகாசம் வழங்கப்பட்டுவிட்டது. அவர்களில் வெறும் 130 குடும்பங்கள் மட்டுமே காலி செய்துள்ளனர். எஞ்சிய நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர், அதிகாரிகள் நேரடியாக சென்று காலி செய்ய வலியுறுத்தியும், காலி செய்ய மறுப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே, முதற்கட்டமாக, மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது," என்றார். 



அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் வருவதற்கு தடையாக இருப்பதாகக் கூறி கே.கே. நகர் குடியிருப்பு நலச்சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவின் அடிப்படையில் ஜீவா நகர் குடியிருப்பை காலி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இங்கிருந்து கீரணத்தம் பகுதிக்கு இடம்பெயரும் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர். ஏனெனில், தினக் கூலிக்கு செல்லும் பொதுமக்கள் கீரணத்தம் பகுதியில் இருந்து நாள்தோறும் கோவை மாநகருக்கு வர நெடுந்தூரம் பயணிக்க வேண்டி உள்ளதே ஆகும். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...