கோவை : கோவையில் குறிப்பிட்ட சில இடங்களில் குண்டு வைக்கப்படும் என சமூக வலைதளங்களில் பொய்யாக பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோவை மாநகரில் கடந்த சில நாட்களாகவே தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் சோதனை, மாநகர காவல் துறையினரின் சோதனை என பல கட்ட விசாரணைகளும், சோதனைகளும் நடைபெற்று வருகிறது. அதில், தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டு, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் விசாரணையில் உள்ளனர். இப்படி தொடர்ந்து பரபரப்பாகி வரும் கோவையில் சில விஷமிகள் வேண்டுமென்றே கோவையில் குறிப்பிட்ட சில பகுதிகளில் குண்டு வைக்க திட்டம் தீட்டியுள்ளதாக வாட்ஸ்அப் மூலம் தகவல்கள் பரப்பி வருகின்றனர்.
இந்த விஷமிகளின் வாட்ஸ் அப் தகவல்கள் தவறானது என்றும், இதை திட்டமிட்டு பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு விஷமிகளை கைது செய்து நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.