திருப்பூர் : திருப்பூரில் தனியார் பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்த 10-ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் : திருப்பூரில் தனியார் பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்த 10-ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் - புவனேஸ்வரி தம்பதியரின் மகள் வர்ஷா, குமார் நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வந்தார். இன்று காலை வழக்கம் போல 7 மணிக்கு பள்ளிக்கு ஆட்டோ மூலம் சென்ற வர்ஷா, வகுப்பறையில் காலை 07.30 மணிக்கு மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து, பள்ளி ஆசிரியர்கள் மாணவியை திருப்பூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி அளித்த பின் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
பள்ளிக்கு சீக்கிரம் செல்ல வேண்டும் என அவசர அவசரமாக வந்த சிறுமி வகுப்பறையிலேயே உயிரிழந்த சம்பவம் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.