கோவை : ஈச்சனாரி அருகே உள்ள ரத்தினம் கல்லூரியின் எதிரே குழாய் உடைப்பால் தண்ணீர் வீணாகி வரும் நிலையில், அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்தாடி வருகிறது. குறிப்பாக, சென்னையில் ஓட்டல்களும், விடுதிகளும் மூடப்பட்டு வரும் அவலம் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்பேரில், கோவை மாநகராட்சியும் அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ஈச்சனாரி அருகே உள்ள ரத்தினம் கல்லூரியின் எதிரே குழாய் உடைப்பால் தண்ணீர் வீணாகிக் கொண்டு இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, பலமுறை தகவல் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

வறட்சி காலத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கு தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டு வரும் நிலையில், தூங்கிக் கொண்டிருக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விழித்துக் கொண்டு, இதுபோன்ற உடைப்புகளை சரிசெய்து, தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டனர்.