நீலகிரி : நீலகிரி மலைத்தொடரில் உள்ள மிகவும் பின்தங்கிய 100 பள்ளிகளுக்கு ஹிந்து நாளிதழ் குழுமம் மற்றும் பிளாக் தண்டர் நிறுவனம் சார்பில் 5 ஆயிரம் புத்தகங்கள் வழங்கப்பட்டன

மலை மாவட்டமான நீலகிரியில் மாவட்டத்தில் உள்ள குன்னூர், கோத்தகிரி. கூடலூர், பந்தலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள குக்கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பின்தங்கிய பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் நூலகம் குறித்து அறிந்து கொள்ளவும், வாழ்வில் முன்னேற புத்தகம் படிப்பது மிகவும் அவசியம் என்பதை விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், இந்து நாளிதழ் மற்றும் பிளாக் தண்டர் தனியார் நிறுவனம் சார்பில் 100 பள்ளிகளுக்கு தலா 50 புத்தகம் வீதம் 5,000 புத்தகங்களை வழங்கும் நிகழ்ச்சி உதகையில் நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்ற இந்த புத்தகம் வழங்கும் நிகழ்ச்சியில், நூறு தலைமையாசிரியர்களிடம் 5 ஆயிரம் புத்தகங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பேசுகையில், "புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஆசிரியர்கள் நாள்தோறும் மாணவ, மாணவிகளிடையே கொண்டு வர வேண்டும். ஆசிரியர்களும் நாள்தோறும் புத்தகங்களைப் படித்து அந்த புத்தகத்தின் கருத்தை குறித்து நாள்தோறும் மாணவ, மாணவிகளிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்," என வலியுறுத்தினார்.