கோவை அரசு விடுதிகளில் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் சேருவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை : கோவையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவர்களுக்கான அரசு விடுதிகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


கோவை : கோவையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவர்களுக்கான அரசு விடுதிகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

இது தொடர்பாக கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- கோவை மாவட்டம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 29 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், கல்லூரி மாணவர்களுக்காக 5 விடுதிகளும், கல்லூரி மாணவிகளுக்காக 2 விடுதிகளும், ஐ.டி.ஐ. மாணவர்களுக்காக ஒரு விடுதியும், பள்ளி மாணவர்களுக்காக 15 விடுதிகளும், பள்ளி மாணவியர்களுக்காக 6 விடுதிகளும் உள்ளன. நடப்பு கல்வி ஆண்டிற்கு பள்ளி விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர்களும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பாலிடெக்னிக், தொழிற்பயிற்சி நிலையங்களில் படிக்கும் மாணவ, மாணவியர்களும் சேர தகுதியுடையவர்களாவர். 

அனைத்து விடுதி மாணவ, மாணவியர்களுக்கு உணவும், தங்கும் வசதியும் இலவசமாக வழங்கப்படுகின்றன. விடுதிகளில் தங்கும் அனைவருக்கும் சீருடைகள், பாய் மற்றும் போர்வை போன்றவை இலவசமாக வழங்கப்படும். விடுதிகளில் சேர பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இருப்பிடத்தில் இருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 5 கி.மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். 

2019-2020 கல்வி ஆண்டிற்கு விடுதிகளில் சேர விரும்பும் தகுதியுடைய மாணவ, மாணவியர்கள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்/ காப்பாளினி ஆகியோரிடமோ அல்லது கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2-வது தளத்தில் இயங்கும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களைப் பூர்த்த செய்து அதனுடன் ஆதார் அட்டை நகல் மற்றும் மாணவ, மாணவியர்களின் பெயரில் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகலினையும் இணைத்து அந்தந்த காப்பாளர்/ காப்பாளினி, வசம் பள்ளி அல்லது விடுதிக்கு 24-ம் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளுக்கு 30-தேதிக்குள்ளும் ஒப்படைக்க வேண்டும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...