கோவை : கோவை மாநகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் சீரான குடிநீர் விநியோகப் பணிகளை கண்காணிக்க சிறப்பு கண்காணிப்பு குழு மற்றும் கள ஆய்வுக் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்

கோவை மாநகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் சீரான குடிநீர் விநியோகம் வழங்கும் பணிகள் மேற்கொள்வது குறித்து நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, சென்னையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அறிவுறுத்தியபடி, கோவை மாநகராட்;சியில் அனைத்து பகுதிகளிலும் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் தெரிவித்ததாவது :- கோவை மாநகராட்சியில் அனைத்து மண்டலத்திற்குட்பட்ட வார்டு பகுதிகளில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கும் பணிகளை கண்காணிப்பதற்காகவும், பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்திட நடவடிக்கை மேற்கொள்வதற்காகவும், செயற்பொறியாளர் தலைமையிலும் கோவை மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்திற்கும் நிர்வாகப் பொறியாளர் தலைமையில் சிறப்பு கண்காணிப்பு குழு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், வார்டு ஒன்றிற்கு ஒருவர் வீதம் 100 வார்டுகளுக்கும் 100 பேர் அடங்கிய கள ஆய்வுக்குழு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இளம் பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள், குடிநீர் ஆய்வாளர்கள் ஆகியோர் இக்குழுவில் பணிகளை மேற்கொள்வார்கள். பொதுமக்களின் குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை நிவர்த்ததி செய்யும் பணிகளை உடனுக்குடன் நிறைவேற்ற இக்குழுவினர் பணிக்கப்பட்டுள்ளார்கள். குடிநீர் விநியோகப் பணிகளை சிறப்பாகவும், பொதுமக்களுக்கு குறைகளை நிவர்த்தி செய்வதற்காகவும் இக்குழுவினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை தொய்வில்லாமல் மேற்கொள்ள வேண்டும்.
மேலும், குடிநீர் விநியோகம் தொடர்பான புகார்களை கீழ்க்கண்ட தொலைபேசி எண்களுக்கு அழைத்து தெரிவிக்கலாம்.
தொலைபேசி எண்கள்:
1. மாநகராட்சி பிரதான அலுவலகம் - 0422- 2302323
2. டி.ஜே.நகர் டேங்க் - 0422- 2572492
3. கணபதி எம்.எஸ்.ஆர். டேங்க் - 0422- 2511911
4. பாரதி பார்க் டேங்க் - 0422- 2442236
5. காந்தி பார்க் டேங்க் - 0422- 2471009
6. சாரதா மில் டேங்க் - 0422- 2676700
7. புலிய குளம் டேங்க் - 0422- 2316267
8. கிழக்கு மண்டல அலுவலகம் - 0422- 2577056
9. மேற்கு மண்டல அலுவலகம் - 0422- 2551700
10. வடக்கு மண்டல அலுவலகம் - 0422- 2243133
11. தெற்கு மண்டல அலுவலகம் - 0422- 2252481
12. மத்திய மண்டல அலுவலகம் - 0422- 2215618
பொதுமக்கள் குடிநீர் விநியோகம் தொடர்பான புகார்களை 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கும் தெரிவிக்கலாம் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித்தார்.