நீலகிரி : மஞ்சூர் - உதகை சாலையோரங்களில் அபாயகரமான நிலையில் உள்ள மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மஞ்சூரில் இருந்து உதகை, குன்னூர், கோரகுந்தா, அப்பர்பவானி, கிண்ணக்கொரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் மற்றும் எமரால்டு, அவலாஞ்சி பகுதிகளுக்கு செல்லும் சாலைகளின் இருபுறங்களிலும் ஏராளமான மரங்கள் வளர்ந்துள்ளன. இவற்றில் பெரும்பாலான மரங்கள் பல ஆண்டுகள் வயதாகியும், பட்டுப்போயும் காணப்படுகிறது. இதனால், காற்று, மழை உள்ளிட்ட சமயங்களில் மரங்கள் சாய்ந்து சாலையின் குறுக்கே விழுகின்றன. குறிப்பாக, பருவ மழை, காற்று புயல் சமயங்களின் போது, அதிகளவில் மரங்கள் விழுவது வாடிக்கையாக உள்ளது. இதனால், வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள், மாணவ, மாணவிகள், வாகன ஓட்டுநர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில், தற்போது தென்மேற்கு பருவமழை துவங்கிய நிலையில், கடந்த சில தினங்களாக மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருகிறது. காற்று, மழையால் மரங்கள் எந்த நேரமும் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் சாலையோரங்களில் அபாயகரமாக வளர்ந்து நிற்கும் மரங்களை வெட்டி அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.