மேட்டுப்பாளையம் ஜமாபந்தி நிகழ்ச்சியில் நீண்ட வரிசையில் காத்திருந்து மனு அளித்த பொதுமக்கள்

கோவை : மேட்டுப்பாளையத்தில் நில சம்பந்தமான பிரச்சனைகளுக்கு நேரடி தீர்வு காணும் ஜமாபந்தி நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மனுக்களை அளித்தனர்.


கோவை : மேட்டுப்பாளையத்தில் நில சம்பந்தமான பிரச்சனைகளுக்கு நேரடி தீர்வு காணும் ஜமாபந்தி நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மனுக்களை அளித்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுக்காவிற்குட்பட்ட பகுதிகளில் நிலம் சம்பந்தமான வருவாய்த்துறை பிரச்சனைகளுக்கு தீர்வுகாண ஆண்டிற்கு ஒரு முறை நடத்தப்படும் ஜமாபந்தி என்னும் வருவாய் தீர்வாயம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது. வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இன்று வெள்ளியங்காடு, தோலம்பாளையம், சிக்காரம்பாளையம், மருதூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நான்கு ஊராட்சி பகுதிகளைச் சேர்ந்த கிராமமக்கள் தங்களது நிலம் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு காண கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் டெய்சி குமார் மற்றும் வட்டாட்சியரிடம் மனுக்களை அளித்தனர்.

இதில், நில அளவை, பட்டா மாறுதல், வாரிசு சான்றிதழ், விவசாய நிலங்கள் சம்பந்தமான சலுகைகளை பெற அளிக்கப்படும் சிட்டா, பட்டா, அடங்கல் சான்றிதழ் வேண்டி மனுக்கள் அளிக்கப்பட்டன. இதன் மீது உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, முகாம் நிறைவடையும் 25-ம் தேதி பயனாளிகளுக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்கள் வழங்கப்பட உள்ளன. இன்று முதல் நடைபெறும் இந்த முகாமில் மீதமுள்ள 14 ஊராட்சி கிராமங்களுக்கு அடுத்தடுத்து வரும் மூன்று நாட்கள் மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காண உள்ளதாக வருவாய்த்துறையினர் தெரிவித்தனர். மேலும், இந்த ஜாமபந்தியில் வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் பெறவும் உரிய ஆவணங்களுடன் வட்டாட்சியர் அலுவலகத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மனுக்களை அளித்தனர்.

இதேபோல, அன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் வடவள்ளி, அன்னூர், காரேகவுண்டன்பாளையம், கரியாம்பாளையம், பிள்ளயப்பம்பாளையம், மசக்கவுண்டன்பாளையம், காட்டம்பட்டி, குப்பேபாளையம், குன்னத்தூர், பச்சாபாளையம், நாரணாபுரம் ஆகிய 11 ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித் தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, விரைவு பட்டா மாற்றம், விலையில்லா வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி வழங்கப்பட்ட 476 மனுக்களைப் மாவட்ட ஆட்சியர் கு. ராசமணி பெற்றுக்கொண்டார். அப்போது, வருவாய் தீர்வாயத்தின் போது பெறப்படும் அனைத்து மனுக்கள் மீதும் தனிக்கவனம் செலுத்தி உடனடி தீர்வு காண தக்க நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...