திருப்பூர் : திருப்பூர் அருகே பேக்கரி கடையில் காலாவதியான உணவு பொருட்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பினாயில் ஊற்றி அழித்தனர்.

பல்லடம் அருகே கே.என். புரத்தைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி. இவர் தனது மகளின் பிறந்தநாளை கொண்டாட வேண்டி பல்லடம் பெரும்பாளி பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் கேக் வாங்கியுள்ளார். பின்னர் வீட்டிற்குச் சென்ற அவர், தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் கேக்கை வெட்டிக் கொண்டாடியுள்ளார். அப்போது, கேக்கை சாப்பிட்ட சிலருக்கு திடீர் வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான காரணம் குறித்து விசாரித்தபோது, கேக் பூசனம் பிடித்து கெட்டுப்போனது என தெரியவந்துள்ளது. இதைடுத்து, மிச்சம்மீதம் இருந்த கேக்குடன் துரைப்பாண்டி பேக்கரிக்குச் சென்று கடை ஊழியர்களிடம் முறையிட்டார்.

அப்போது, கடை ஊழியர்கள் அவரை மிரட்டியதாக தெரிகிறது. இதையடுத்து, அவர் பல்லடம் உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகாரளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, கேசவராஜ் தலைமையிலான அதிகாரிகள் பேக்கரிக்குச் சென்று ஆய்வு நடத்தினர்.

அதில், கெட்டுப்போன கேக் வகைகள், குளிர்பானங்கள், காளான், நூடுல்ஸ் வகைகள் உள்பட ரூ. 10,000 மதிப்பிலான உணவு பொருட்களை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர்.