கோவை : காரமடை அருகே கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு சரக்கு வாகனம் தாறுமாறாக ஓடியதால் ஏற்பட்ட விபத்தில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் பலியானார்.

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள தாயனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்துரு (19). இவர் மருதூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த 15ஆம் தேதி மருதூர் அருகே உள்ள சாலையில் இருசக்கர வாகனத்தில் பணியை முடித்து கொண்டு, காரமடை நோக்கி சாலையில் சென்று கொண்டிருந்தார். இவர் விஜியநகரம் அருகே வந்துகொண்டிருந்த போது, குமரன் குன்று பகுதியில் இருந்து வாடகை பாத்திரங்களை ஏற்றி கொண்டு கனுவாய்பாளையம் நோக்கி வந்த பிக்கப் சரக்கு வாகனம் சந்துரு மீது பயங்கரமாக மோதியது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் பதறிபோய் பிக்கப் வாகனத்தை நிறுத்துமாறு கூறியுள்ளனர். ஆனால், சரக்கு வாகனத்தை ஓட்டுநர் அங்கு நிறுத்தாமல் வேகமாக எடுத்துச் சென்றுள்ளார். கிராமத்தில் இருந்த சில இளைஞர்கள் விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற அந்த வாகனத்தை துரத்தியபோது, சரக்கு வாகனம் புஜங்கனூர் தேக்கம்பட்டி சாலை வழியே வேகமாக சென்றது.
அப்போது, எஸ்.புங்கம்பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த தேக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த நடராஜ் என்பவர் அந்த சாலை வழியே இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அவர் மீதும் சரக்கு வாகனம் பயங்கரமாக மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில், சம்பவ இடத்திலேயே ஆசிரியர் நடராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே, விஜியநகரம் பகுதியில் விபத்தில் சிக்கிய சந்துருவை அப்பகுதி மக்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வந்த நிலையில், அவர் இன்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
மேலும், அடுத்தடுத்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் தப்பி ஓடிய மூக்கனூர் கிராமத்தை சேர்ந்த ஓட்டுநர் குமாரும் படுகாயமடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த காரமடை போலீசார், விபத்தை ஏற்படுத்திய ஒட்டுநரை மருத்துவமனையில் இருந்து இன்று கைது செய்வார்கள் என தெரிகிறது.