கோவை : ஏ.வி.பி. ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் உலக யோகா தினத்தை முன்னிட்டு வரும் 21-ம் தேதி மாபெரும் 'ஆயு-யோகா' நிகழ்ச்சி நடக்கிறது.

உலக முழுவதும் வரும் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, கோவை மக்களிடம் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், ஆர்ய வைத்திய பார்மஸி, எஸ்.என்.ஆர். கல்வி குழுமங்களின் உதவியுடன் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுடன் சேர்ந்து அன்றைய தினம் ஆயு-யோகா' என்ற மாபெரும் யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளி வளாகத்தில் காலை 8 மணிக்கு நடக்கும் இந்த யோகா நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்க இருக்கின்றனர்.
இதேபோல, கடந்த ஏப்.,7-ம் தேதி சர்வதேச சுகாதார தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட ஆயு-ரன் மராத்தான் போட்டியில் 800-க்கும் மேற்பட்ட கோவை மக்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. மேலும், தொடர்புக்கு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ராகுல் ரேகு குமாரை (+91 7979032662) தொடர்பு கொள்ளலாம்.