கோவை : கோவை மாவட்டத்தில் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய இலவச திறன் பயிற்சி வழங்குவதற்காக இளைஞர்களை சேர்க்கும் முகாம்களில் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
கோவை : கோவை மாவட்டத்தில் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய இலவச திறன் பயிற்சி வழங்குவதற்காக இளைஞர்களை சேர்க்கும் முகாம்களில் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலமாக தீன் தயாள் உபாத்யாய கீராமின் கௌசல்ய யோஜ்னா திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் பொருட்டு வேலை வாய்ப்புடன் கூடிய இலவச திறன் பயிற்சியாக கம்ப்யூட்டர் சார்ந்த பயிற்சிகள், ஆயத்த ஆடை தயாரித்தல் குறித்த பயிற்சிகள், ஆட்டோ மொபைல் பயிற்சிகள், பி.பி.ஓ., சில்லறை வணிகம் குறித்த பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. மேலும், வங்கி தொடர்பான பயிற்சி, சோலார் டெக்னிசியன் பயிற்சி, வெல்டிங் பயிற்சி போன்ற பயிற்சிகளும் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் 18 வயதிலிருந்து 35 வயதிற்குட்பட்ட ஆண்/பெண் இருபாலாருக்கும் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. 3 மாதம் முதல் ஓராண்டு வரையிலான இப்பயிற்சியின் போது, தங்குமிடம், உணவு, பாடப்புத்தகங்கள், சீருடை மற்றும் கணினி போன்றவை இலவசமாக வழங்கப்படும்.
முகாம்கள் நடைபெறும் இடங்கள் : அன்னூர் (ஜுன் 24), காரமடை (ஜுன் 29), பெரியநாயக்கன் பாளையம் (ஜுன் 27), எஸ்.எஸ். குளம் (ஜுன் 21), கிணத்துக்கடவு (ஜுன் 20), பொள்ளாச்சி (வடக்கு, தெற்கு) (ஜுன் 19), சுல்தான் பேட்டை (ஜுன் 22), சூலூர் (ஜுன் 28), ஆனைமலை (ஜுன் 25), மதுக்கரை (ஜுலை 2), தொண்டாமுத்தூர் (ஜுன் 26).
வேலைவாய்ப்பற்ற அனைத்து இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் தவறாது தங்களது கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை, பயோடேட்டா, புகைப்படம் ஆகிய சான்றிதழ்களுடன் கலந்து கொண்டு பயனடைய வேண்டும், எனக் கேட்டுக் கொண்டார்.