சீரான குடிநீர் விநியோகிக்க வலியுறுத்தி உதகை - குன்னூர் சாலையில் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

நீலகிரி : உதகை நகராட்சிக்குட்பட்ட நொண்டிமேடு நேரு நகர் பகுதிக்கு முறையாக குடிநீர் வழங்குவதில்லை எனக் கூறி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


நீலகிரி : உதகை நகராட்சிக்குட்பட்ட நொண்டிமேடு நேரு நகர் பகுதிக்கு முறையாக குடிநீர் வழங்குவதில்லை எனக் கூறி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

உதகை நகராட்சிக்குட்பட்ட நொண்டிமேடு பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில், நேரு நகர் மலைப்பாங்கான பகுதியில் உள்ளது. இங்கு வாழும் மக்கள் பெரும்பாலானவர்கள் கூலித்தொழிலாளர்கள். இவர்கள், நாள்தோறும் அதிகாலை நேரங்களில் வேலைக்கு சென்று, மாலை நேரங்களில் தான் வீடுகளுக்கு திரும்புவது வழக்கம். இவர்களுக்கு, உதகை நகராட்சி சார்பில் வழங்கப்படும் தண்ணீர் மட்டுமே முக்கிய ஆதாரமாக உள்ளது. மலைப்பாங்கான பகுதி என்பதால் கிணறு மற்றும் ஊற்று போன்ற எந்தவசதிகளும் கிடையாது. இதனால், நகராட்சி தண்ணீரையே நம்பியுள்ளனர். 



இப்பகுதிக்கு நகராட்சி சார்பில் 5 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வழங்குவது வாடிக்கையாக உள்ளது. ஆனால், இம்முறை கடந்த 15 நாட்களாக தண்ணீர் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், குடிக்க ஒரு குடம்கூட தண்ணீர் இல்லை எனக் கூறி நொண்டிமேடு, நேருநகர் பகுதியைச் சேர்ந்த பெண்கள் மற்றும் ஆண்கள் என 50-க்கும் மேற்பட்டவர்கள் காலிகுடங்களுடன் உதகை - குன்னூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். காலி குடங்களுடன் சாலையில் பெண்கள் அமர்ந்து கொண்டதால் இரு மார்க்கத்திலும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 



இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அப்பகுதிக்கு வந்தனர். டி.எஸ்.பி., தங்கவேல் மற்றும் அதிகாரிகள் அங்கு மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர். அப்போது, தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். மேலும், பார்சன்ஸ்வேலி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நாள்தோறும் தண்ணீர் வழங்க நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொறியாளர் ரவி, உடனடியாக நேரு நகர் பகுதி மக்களின் தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தற்போதைக்கு ஒரு லாரி தண்ணீர் வழங்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது, என உறுதியளித்தார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...