பொள்ளாச்சி தி.மு.க., எம்.பி. குறித்து அவதூறான கருத்துக்களைப் பரப்பி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு

கோவை : பொள்ளாச்சி எம்.பி. குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துக்களைப் பரப்பி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தி.மு.க. வழக்கறிஞர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

கோவை : பொள்ளாச்சி எம்.பி. குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துக்களைப் பரப்பி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தி.மு.க. வழக்கறிஞர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

பொள்ளாச்சி தி.மு.க., எம்.பி. சண்முகசுந்தரம் மீது சமூக வலைத்தளங்களில் நில அபகரிப்பு தொடர்பான புகார்கள் பரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த புகாருக்கு மறுப்பு தெரிவித்துள்ள தி.மு.க.வின் வழக்கறிஞர் பிரிவினர், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது :- தி.மு.க.வின் பெயரை வேண்டுமென்றே திட்டமிட்டு கலங்கப்படுத்தும் விதமாக, அவதூறு பரப்பும் நோக்கில் சிலர் செயல்படுகின்றனர். மேலும், நில அபகரிப்பில் மீண்டும் தி.மு.க.வினர் என்றும், தி.மு.க., எம்.பி. சண்முகசுந்தரத்தின் உறவினர் அடாவடி என்றும் எஸ்.ஜி. சூர்யா என்பவர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்.

அதேபோல், பொள்ளாச்சி அருகே வாய்க்காலில் ஆக்கிரமிப்பு செய்ததாகக் கூறி ஊடகங்களில் தி.மு.க.வை அவதூறாக பரப்பி வருகின்றனர். இப்படி கார்த்திக் மற்றும் எஸ்.ஜி. சூர்யா ஆகிய இருவரும் தி.மு.க.விற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில், ஆதாரமற்ற பொய்யான தகவல்களைப் பரப்பி வருவதால், அவர்களின் சமூகவலைதள கணக்கை முடக்கி, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், என புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...