நீலகிரி : இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிகிறார்களா என குறிப்பிட்ட முக்கிய சாலையில் ஒரு வாரகாலம் கண்காணிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

நீலகிரியில் உள்ள இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தலைக்கவசத்தைக் கண்டிப்பாக அணிகிறார்களா என்று கண்காணிக்க ஒரு வாரம் முழுவதும் ஒரு முக்கிய சாலை தேர்ந்தெடுக்கப்பட்டு, அதில் காவல்துறையினர் பிரத்யேகமாக நிறுத்தப்படுவார்கள் என காவல் கண்காணிப்பாளர் சண்முகப் பிரியா தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்த மாவட்ட காவல்கண்காணிப்பாளர் பொதுமக்கள் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவத்தை வாகன ஓட்டிகளுக்கு எடுத்துரைத்தார்.

ஒரு வாரகாலம் ஊர் சாலை ஒன்றை தேர்ந்தெடுத்து அந்த ஊரில் உள்ள இருசக்கர வாகன ஓட்டிகளுக்குத் தலைக்கவசத்தின் முக்கியத்துவத்தை தெரிவிப்பதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.