கோவை : குடிநீர் பிரச்சினையை சமாளிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு தி.மு.க. சார்பில் 19-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருப்பதாக தி.மு.க. மாநகர் மாவட்ட பொறுப்பாளரும், சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நா. கார்த்திக் தெரிவித்தார்.

கோவை தி.மு.க. அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது :- தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் அதிகரித்துள்ளது. கோவை மாவட்டத்திலும், கோவை மாநகராட்சி பகுதிகளிலும் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி பகுதிகளில் 15 நாட்கள் அல்லது 20 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் வழங்கப்படுகின்றது. கடந்த வருடம் மழை அதிகம் பெய்த நிலையில், நீரை சேமிக்க அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 8 ஆண்டு காலமாக குடிநீர் மேலாண்மை பணிகளை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி முறையாக செய்யவில்லை. இதனால், குடிநீர் பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது.

கோவையில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க மாநகராட்சி ஆணையரை சந்தித்து ஏற்கனவே வலியுறுத்தினோம். இதுவரை மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் பிரச்சினையை சரி செய்யவில்லை. தமிழகம் முழுவதும் முறையாக குடிநீர் விநியோகத்தில் கவனம் செலுத்தாத அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பாக வரும் 19-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கின்றோம். இந்த ஆர்ப்பாட்டத்தில் தண்ணீர் விநியோகம் செய்ய சூயஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தினை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப் போகிறோம்.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதவி விலகக் கோரியும், மக்களுக்கு தண்ணீர் வழங்கக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. குடிநீர் பிரச்சினையை சமாளிக்க எந்த முன்னேற்பாடுகளையும் கோவை மாநகராட்சி செய்யவில்லை. தமிழகம் முழுவதும் குடிநீர் திட்ட ஏற்பாடுகளை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி முறையாக செய்யவில்லை. எனவே, எஸ்.பி. வேலுமணி பதவி விலக வேண்டும். மேலும், சூயஸ் நிறுவனத்திற்கு தண்ணீர் விநியோகம் செய்யும் உரிமம் வழங்கப்படுவதால், பொதுக்குழாய்களே இல்லாமல் போய்விடும். இதனால், சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். குடிநீர் கட்டணம், வைப்புத் தொகை, எவ்வளவு நீர் விநியோகம் என்பது போன்றவை அந்த சூயஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் போய்விடும் நிலை இருப்பதால் சூயஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், என சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா. கார்த்திக் வலியுறுத்தினார்.
இந்த சந்திப்பின் போது, மாநகர் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் நாச்சிமுத்து, நந்தகுமார், மெட்டல் மணி, குப்புசாமி, உமா மகேஸ்வரி, பகுதி கழக செயலாளர் கோவை லோகு, பகுதி கழக பொறுப்பாளர் சேதுராமன், சண்முகசுந்தரம் பொதுக்குழு உறுப்பினர்கள் தீபா, ராஜராஜேஸ்வரி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.