கோவை : பெரியநாயக்கன் பாளையம் அருகே சட்டவிரோதமாக காட்டுப் பன்றியை வேட்டையாடிய இரண்டு பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பெரிய நாயக்கன் பாளையம் வனக்கோட்டத்திற்குட்பட்ட பகுதியின் அருகே உள்ள பட்டா நிலத்தில் நாட்டு வெடிகுண்டு வைத்து காட்டுப் பன்றி நேற்றிரவு வேட்டையாடப்பட்டது. அப்போது, வன எல்லையை ஒட்டியுள்ள பகுதிகிளில்ல் வனத்துறை அதிகாரி சுரேஷ் தலைமையிலான குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த சமயம், இருவர் மர்மமான பையைத் தூக்கி வந்துள்ளனர். இதனால், சந்தேகமடைந்த வனத்துறையினர், அவர்களை பிடித்து சோதனை மேற்கொண்டனர். அதில், காட்டுப் பன்றியின் இறைச்சி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, வனவிலங்கு தடுப்புச் சட்டம் 1972-க் கீழ் வழக்குப்பதிவு செய்து, கூடலூர் கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பி. குமார் (38), திருமலைநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த எம். ஆறுமுகம் (51) ஆகிய இருவரைக் கைது செய்தனர். பின்னர், இருவருக்கும் தலா ரூ. 20,000 அபராதம் விதித்தனர்.