கோவை : நாட்டு மாடு மேய்ச்சலுக்குப் பட்டி பாஸ் வழங்கி, அதனை அழிவில் இருந்து காப்பாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் கால்நடை விவசாயிகள் மனு அளித்தனர்.

மக்கள் குறை தீர்ப்பு நாளான இன்று கொங்கு பட்டீஸ்வரன் கோசாலை சார்பில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணியிடம் மனு ஒன்று அளித்தனர். அதில் நாட்டு மாடு மேய்ச்சலுக்குப் பட்டி பாஸ் வழங்கிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.

இதன் பின்னர் அவர்கள் கூறியதாவது :- மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தொண்டாமுத்தூர், வடசித்தூர், குப்பனூர் உள்ளிட்ட 18 கிராமங்கள் இருக்கிறது. இந்தப் பகுதிகளில், நாட்டு மாடுகள் வளர்க்கப்பட்டு வந்த நிலையில், 2002-ம் ஆண்டு வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு வனத்துறை அனுமதி மறுத்த காரணத்தால், நாட்டு மாடுகள் இனம் அழிவை நோக்கி செல்கிறது. உணவின்றி தவித்த மாடுகளை விவசாயிகள் அறுவைக்கு விற்று விட்டனர். மேலும், நாட்டு மாடுகள் மேய்ப்பதால் வனத்தின் வளம் பெறும் என்ற நிலை உள்ளது. நாட்டு மாட்டுப் பாலில் அதிக புரத சத்துகள் உள்ளன. வனப் பகுதிகளை ஒட்டி கேளிக்கை விடுதிகள், ஆசிரமங்கள் மற்றும் குடியிருப்புகள் அதிகரித்து உள்ளதே, மாடுகள் மேய்ச்சலுக்கு வனத்துறை அனுமதி மறுக்கக் காரணமாகும்.
விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் விவசாயிகளுக்குப் பட்டி பாஸ் வழங்கி மேய்ச்சலுக்கு அனுமதி அளித்து, நாட்டு மாடுகளை அதன் இன அழிப்பில் இருந்து காப்பாற்றிட மாவட்ட ஆட்சியர் விசாரணை மேற்கொள்ள வேண்டும், என வலியுறுத்தப்பட்டுள்ளது.