கோவை : அதிகாரிகளின் வற்புறுத்தலின் பேரில், வசிப்பிடத்தை காலி செய்தால் பள்ளி மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குக் குழந்தைகளுடன் வந்து ஜீவா நகர் பகுதி பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை - மேட்டுப்பாளையம் சாலை அருகே உள்ள ஜீவா நகரில் கடந்த 40 ஆண்டுகளாக 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 1988-ஆம் ஆண்டு குடிசை மாற்று வாரியம் ஜீவா நகர் பகுதியை தத்தெடுத்து ஓட்டு வீடுகள் கட்டுவதற்கு கடன் வழங்கியுள்ளது. இந்த நிலத்திற்கான கிரையத்தொகை மற்றும் குத்தகை தவணை தொகைகளை கடந்த 30 ஆண்டுகளாக செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஜீவா நகரில் இருக்கும் வீடுகளை அப்புறப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில் குடிசை மாற்று வாரியம், மாவட்ட ஆட்சியர், கோவை மாநகராட்சியை எதிர் மனுதாரராக சேர்த்துள்ளனர்.

இதனையடுத்து, இப்பகுதியில் இருப்பவர்களை காலி செய்யக்கோரி மாநகராட்சி மற்றும் நகரமைப்பு துறையினர் வாய்மொழியாக மிரட்டுவதாகவும், ஜீவா நகரில் வசிக்கும் 204 பேருக்கும் இருக்கின்ற இடத்தை கிரையம் செய்து கொடுக்க சட்டரீதியான நடவடிக்கையைக் குடிசை மாற்று வாரியம் மேற்கொள்ள வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அதிகாரிகள் தங்களது பகுதியில் மின் இணைப்புகளை துண்டித்து விட்டதாகவும், வசிப்பிடத்தை காலி செய்ய சொல்லி அதிகாரிகள் தொடர்ந்து வற்புறுத்துவதாகவும், இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் எனக் கூறி பள்ளி குழந்தைகளுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.