கோவை : ஆழ்துளை குழாய் அமைத்து நிலத்தடி நீரை உறிஞ்சி தண்ணீர் தட்டுபாட்டை உருவாக்கும் தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை கோரி விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை : ஆழ்துளை குழாய் அமைத்து நிலத்தடி நீரை உறிஞ்சி தண்ணீர் தட்டுபாட்டை உருவாக்கும் தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை கோரி விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மக்கள் குறை தீர்ப்பு நாளான இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில், கோவை - அன்னூர் தாலுகா வெள்ளானபட்டி ஆண்டக்காபாளையம் கிராமத்தில் பிளாசம் சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர் என்ற பெயரில் இயங்கி வருகிறது. ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து பெருமளவில் தண்ணீர் உறிஞ்சி எடுப்பதால் நிலத்தடி நீர் வெகுவளவில் குறைந்துள்ளது. மேலும், இதனால் 200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து மனு அளித்த பின்னரும், இதுவரை அந்நிறுவனத்தின் மீது விசாரணையோ, நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்படவில்லை.

ஆழ்துளை குழாய் மூலம் தண்ணீர் எடுப்பதன் காரணமாக, கால்நடைகள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளதாலும், தண்ணீர் பற்றாக்குறை நிலவி வரும் இந்த சூழலில் தனியார் நிறுவனத்தின் மீது உடனடியான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், என வலியுறுத்தினர்.