திருப்பூர் : மருத்துவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுத்து நிஅருத்தும் வகையில் சட்டம் இயற்ற வலியுறுத்தி இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் திருப்பூர் ரயில் நிலையம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.

கொல்கத்தா மருத்துவக்கல்லூரி பயிற்சி மருத்துவர் பிரதிபா முகர்ஜி மீது நோயாளிகளின் உறவினர்களால் கொலைவெறித் தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இதுபோன்ற நடவடிக்கைக்கு மத்திய அரசு மருத்துவமனை பாதுகாப்பு சட்டம் கொண்டுவர வலியுறுத்தியும் இந்தியா மருத்துவர் சங்கத்தின் சார்பில் திருப்பூர் ரயில் நிலையம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மருத்துவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் செந்தில்குமரன் தலைமை வகித்தார். செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் ரமேஷ் பொம்மை சாமி உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

திருப்பூர் மாவட்டம் முழுவதும் சுமார் 450 மருத்துவமனைகளில் பணியாற்றக்கூடிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் 24 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.