எழுத்தாளர் சாரு நிவேதா மற்றும் பாடகர் ஜெயச்சந்திரனுக்கு கண்ணதாசன் விருது

கோவை : ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனமும், கண்ணதாசன் கழகமும் இணைந்து 12-ம் ஆண்டாக நடத்திய விழாவில், எழுத்தாளர் சாரு நிவேதா மற்றும் பாடகர் ஜெயச்சந்திரனுக்கு கண்ணதாசன் விருது வழங்கப்பட்டது.

கோவை : ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனமும், கண்ணதாசன் கழகமும் இணைந்து 12-ம் ஆண்டாக நடத்திய விழாவில், எழுத்தாளர் சாரு நிவேதா மற்றும் பாடகர் ஜெயச்சந்திரனுக்கு கண்ணதாசன் விருது வழங்கப்பட்டது.

நடத்தினர். நேற்று மாலை ஆர்.எஸ்.புரம் கிக்கானி மேல்நிலைப்பள்ளி சரோஜினி நடராஜ் கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சங்கரா கண் மருத்துவமனை நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் ஆர்.வி.ரமணி தலைமை தாங்கினார். 



எழுத்தாளர் மரபின் மைந்தன் முத்தைய்யா, இசைக்கவி ரமணன், எழுத்தாளர் அராத்து, நெல்லை லாலா ஸ்வீட்ஸ் மா ரியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இந்த நிகழ்ச்சியில், எழுத்தாளர் சாரு நிவேதா மற்றும் பாடகர் ஜெயச்சந்திரனுக்கு கண்ணதாசன் விருது வழங்கப்பட்டது. கண்ணதாசன் விருது கடந்த 2009 முதல் எழுத்தாளர்கள், பாடகர்கள், பாடலாசிரியர்கள், திரைக்கலைஞர்கள், பதிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இதற்கு முன் நாஞ்சில் நாடன், வண்ணதாசன், அசோகமித்திரன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், பிரபஞ்சன், சிற்பி, மாலன், கலாப்ரியா, அமுதோன் உள்ளிட்ட எழுத்தாளர்கள் விருது பெற்றுள்ளனர். மேலும், டி.ஆர்.எம். சாவித்திரி, சீர்காழி சிவசிதம்பரம், ராம முத்தையா, பதிப்பாளர் பி.ஆர்.சங்கரன், முத்துலிங்கம், வாணி ஜெயராம், பி.சுசீலா, பஞ்சு அருணாசலம், எல்.ஆர்.ஈஸ்வரி, எஸ்.பி.பாலசுப்ரமணியம் உள்ளிட்டோருக்கும் கண்ணதாசன் விருது வழங்கப்பட்டுள்ளது. விருது பெற்றவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசும், பாராட்டுப் பட்டயமும் வழங்கப்பட்டது. 



விழாவில் ஏற்புரை வழங்கிய எழுத்தாளர் சாரு நிவேதிதா, “ஒரு எழுத்தாளரின் படைப்புகளைக் குறித்து செவி வழியான விமர்சனங்கள் மூலமாக அறிந்து கொண்டு அவரின் படைப்புகளை படிக்காமலேயே ஒதுக்குவது கூடாது. எழுத்தாளரின் படைப்புகளை படிக்க வேண்டும். அதன் பின்னரே கருத்துக்களைக் கூற வேண்டும். எழுத்தாளர்கள் ஆண், பெண் போன்று தனி இனம். தனி உலகில் வாழ்பவர்கள். அவர்களை சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். பயணங்கள், அனுபவங்கள் மூலமாக இலக்கியம் படைப்பவர்கள். விருதுகளும், பரிசுகளும் அங்கீகாரம் கொடுத்து ஊக்கம் கொடுப்பவை,” என்றார். 



அடுத்து பேசிய பாடகர் ஜெயச்சந்திரன், “கண்ணதாசன் பெயரால் வழங்கப்படும் விருது எனக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அவருடனும், எம்.எஸ். விஸ்வநாதனும் அவர்களுடனும் பணியாற்றியது எனக்கு பெருமை மிகுந்த தருணங்கள் என்றும் விருது வழங்கியமைக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.



இந்த விழாவில் மரபின் மைந்தன் முத்தையாவின் தைப்பாவை குறுந்தகடுற்ற வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் எழுத்தாளர்கள், இலக்கிய வாசகர்கள், கண்ணதாசன் ரசிகர்கள், பொதுமக்கள என ஆயிரக் கணக்கான மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...