கோவை : சிறுதுளி அமைப்பின் 16 வது ஆண்டு விழாவை முன்னிட்டு புகைப்பட கண்காட்சி ரேஸ் கோர்ஸ் நடைபாதையில் தொடங்கியது.
கோவை : சிறுதுளி அமைப்பின் 16 வது ஆண்டு விழாவை முன்னிட்டு புகைப்பட கண்காட்சி ரேஸ் கோர்ஸ் நடைபாதையில் தொடங்கியது.

சிறுதுளி தனது 16-வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில், நகரம் முழுவதும் 17 பள்ளிகளில் கிட்டத்தட்ட 4,000 மாணவர்களுக்கு சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர். மேலும், அந்த நாளை நினைவுகூறும் வகையில், ஜூன் 17 ஆம் தேதி ரேஸ்கோர்ஸ் சாலையில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், மாவட்ட ஆட்சியர் கு.ராஜமணி மற்றும் நல்லறம் அறக்கட்டளையின் நிறுவனர் எஸ்.பி அன்பரசன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

மேலும், பாலாஜி சரவணன் - DC சட்டம் & ஒழுங்கு, சதீஷ் சந்திர வர்மா ஐ.பி.எஸ் - IGP CRPF, சதீஷ்குமார் தூபே - RAF 105 BN, ரூபன் சங்கர் ராஜ்- திட்ட இயக்குநர் DRDA மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் பங்கெடுத்து சிறப்பு செய்தனர்.

சிறுதுளியின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், கூடின அனைத்து நல்லுள்ளங்களையும் வரவேற்று, சிறுதுளியின் 16 வருடங்களின் பயணத்தை நன்றி கலந்த உரையாடலாக வழங்கினார். மாவட்ட ஆட்சியர் கு. ராஜாமணி சிறுதுளி குழுவினரின் செயல்பாட்டை பாராட்டி மென்மேலும் வளர வாழ்த்து தெரிவித்தார். நீர்நிலை பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து கோவை மக்கள் சிறுதுளியுடன் கரம்கோர்த்து பங்களிக்க வேண்டுமென்று கோரிக்கையாக முன்வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த 16 ஆண்டுகளில் சிறுதுளியின் முக்கியமான சாதனைகளைக் காட்டும் வகையில், புகைப்பட கண்காட்சியை ரேஸ் கோர்ஸ் நடைபாதையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துவக்க விழாவின் இறுதியாக, இனிப்புகளை வழங்கி 16 மரக்கன்றுகளையும் நட்டு மகிழ்ந்தனர். இக்கண்காட்சி மாலை 7 மணி வரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறுதுளியுடன் பங்கெடுப்பதற்கு தன்னார்வலர்களாக பதிவு செய்யவும், மரங்களை பரிசாக வழங்கும் முயற்சியில் ஈடுபடவும் பதிவுகளை இங்கு சமர்ப்பித்துக்கொள்ளலாம்.