Breaking: கோவையில் அசம்பாவித சம்பவங்கள் முறியடிப்பு : 3 இஸ்லாமிய இளைஞர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல்

கோவை : பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிருப்பதாக கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


கோவை : பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிருப்பதாக கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 12ஆம் தேதி கோவை மாநகர் டி3 போத்தனூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் உதயகுமாருக்கு தகவலாளி மூலம் கோவையில் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவாளர்கள் தொடர்ந்து ஆலோசனைகள் மேற்கொண்டு வருவதாகவும், கோவை மாவட்டத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, கோவை மாநகர போலீசார் முகமது உசேன், ஷாஜகான், ஷேக் சபிபுல்லா ஆகியோர் வீடுகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அதேபோல, சோதனையையடுத்து பி.ஆர்.எஸ். மைதானத்தில் உள்ள சிறப்பு பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்த மூன்று நபர்கள் மீதும் 

(unlawful prevention act)1967 யு.எ.பி.எ.18,

(unlawful prevention act)1967 யு.எ.பி.எ.38,

(unlawful prevention act)1967 யு.எ.பி.எ. 39,

என்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த மூன்று பேர் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிக்குரிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தும் முதல் தகவல் அறிக்கையில் பதிவிடப்பட்டுள்ளது.

அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது ;- இவர்கள் 3 பேரும் இலங்கையில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதல் குறித்தும் இதை அரங்கேற்றிய சஹரன் அஸ்மி மற்றும் அவர்களது கூட்டாளிகளை குறித்தும் பெருமையாக பேசி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அதேபோல, ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு பற்றியும் ஆலோசனை நடத்தி வருவதும் தெரியவந்துள்ளது. மேலும், கத்தியால் காஃபீர்களை எப்படி கொள்வது..? டிரக் மூலம் எப்படி தாக்குதல் நடத்துவது..? போன்றவற்றை விளக்கும் புகைப்படங்கள் துண்டு பிரச்சாரங்களை வைத்துக் கொண்டு தங்களுக்குள் அடிக்கடி ரகசியமாக பேசி வந்துள்ளனர். மேலும், புகைப்படங்கள் மற்றும் விவரங்களை இவர்களுடன் தொடர்புடைய வெளிநாட்டு நபர் மூலம் பெற்றுள்ளதும், அதேபோல ஐ.எஸ்.ஐ.எஸ். சார்பில் கோவை மாவட்டத்தில் ஏதாவது தீவிர தாக்குதல் நடத்தி இஸ்லாத்திற்கு தங்களை தியாகம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

மேற்படி தகவலாளி தெரிவித்த கருத்துக்கள் மிகவும் தீவிரத் தன்மை உடையது என்பதால் நடத்தப்பட்ட விசாரணையில் தகவலாளி சொன்ன தகவல்கள் மற்றும் பல்வேறு கூடுதல் தகவல்கள் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். போர்க் காட்சிகளின் வீடியோ, ஈராக் மற்றும் சிரியா அரசுகளுக்கு எதிரான ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு நடத்தி வரும் ஜிகாத் காட்சிகளின் வீடியோ, கிலாபத், ஹவாரிஜ், ஹிஜ்ரா ஆகியவை பற்றிய (pdf) கோப்புகளை பகிர்ந்து வருவதும், அவற்றை தமிழாக்கம் செய்துள்ளது தெரியவந்துள்ளது.

இவைகளை செய்வதன் மூலம் வெளிநாடுகளில் ஐ.எஸ்.ஐ.எஸ். நடத்தும் தற்கொலைத் தாக்குதல் போல், கோவை மாநகரில் மக்களுக்கு இவர்களது பலத்தை காட்டவும், பாடம் புகட்ட விரும்புவதும், கோவையில் கோவில்கள், சர்ச்சுகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி பொதுமக்களை கொள்ளவும் திட்டமிட்டிருப்பது தெரிய வருகிறது. அதேபோல, கோவை மாநகரில் இவர்களின் ஜிகாதி சித்தாந்தங்கள், கொள்கைகள், நம்பிக்கைக்கு எதிரானவர்களையும், நுண்ணறிவு பிரிவுகளில் உள்ள சிலரையும் கொன்று மக்களின் மனதில் பயங்கரத்தையும், பீதியையும் உருவாக்க முடிவு செய்திருக்கிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது. போலீசாரின் இந்த முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...