கோவை : தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் கோவையை சேர்ந்த இரு பட்டதாரிகளின் பனை விதகளை சேகரிக்கும் செயலுக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர்.

கோவை போடிபாளையம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் (28) மற்றும் சீரபாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (28)ஆகியோர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். தற்போது, கோடை காலம் முடிந்து மழை காலம் துவங்க உள்ள நிலையில், போடிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பனை மரங்களில் இருந்து விழும் பனை விதைகளை சேகரிக்கும் பணிகளை செய்து வருகின்றனர். ஞாயிறு விடுமுறையில் காலை 5 மணிக்கு மோட்டார் சைக்கிளில் செல்லும் இளைஞர்கள் இருவரும் மதியதிற்குள் கிட்டத்தட்ட 500 விதைகளை சேகரிக்கின்றனர். ஒவ்வொரு வாரமும் சென்று சேகரிக்கப்படும் விதைகளை ஒரே இடத்தில் சேமித்து வைத்து, மழை துவங்கியவுடன் கிராமப்புறங்களில் உள்ள குளக்கரைகளில் இந்த விதைகளை நட திட்டமிட்டுள்ளனர்.

இது குறித்து அவர்கள் பேசியதாவது:-வெறும் சமூக வலைதளங்களில் தமிழ் பெருமைகளையும், மரபுகளை பேசுவதோடு நிற்காமல், களத்தில் இறங்கி அதற்கான பணிகளை செய்ய திட்டமிட்டோம். அதன் அடிப்படையிலேயே அழிந்து வரும் நமது பாரம்பரிய பனை மரங்களை காப்பாற்றவும், அதன் மூலம், தமிழ் மரபுகளை திரும்ப கொண்டு வரும் பணியை துவங்கி உள்ளோம். பனை மரங்களின் பயன்பாடுகள் மிகவும் மகத்தானது, இதன்மூலம், வேலை வாய்ப்புகள் கூட உருவாகும். இதே போல், ஒவ்வொரு இளைஞர்களும் சமூக பணிகளை செய்ய முன்வர வேண்டும், என தெரிவித்தனர்.