திருப்பூர் அருகே தந்தையைப் பற்றி அவதூறாக பேசியதால் ஆத்திரம் : கல்லூரி நண்பரை கொலை செய்த மாணவன் கைது

திருப்பூர் : திருப்பூர் அருகே தந்தையை பற்றிய அவதூறாக பேசியதால், கல்லூரி நண்பரை கொலை செய்த மாணவனை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

திருப்பூர் : திருப்பூர் அருகே தந்தையை பற்றிய அவதூறாக பேசியதால், கல்லூரி நண்பரை கொலை செய்த மாணவனை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

சிவகங்கை மாவட்டம் அரசகுளத்தை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் மகன் அகஸ்டியன் (20). ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியைச் சேர்ந்த ஜேசுராசு (50) மற்றும் அவரது மகன் பிரான்சிஸ் வல்லரசு (20) ஆகிய மூவரும் அவிநாசியை அடுத்துள்ள காசிகவுண்டன்புதூரில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அவிநாசியை அடுத்து நீலிபாளையத்தில் தனியார் கல்லூரியில் அகஸ்டியன் இளங்கலை இரண்டாம் ஆண்டு கணிதமும், பிரான்சிஸ் வல்லரசு இளங்கலை வணிகவியல் இரண்டாம் ஆண்டும் படித்து வந்தனர். இருவரும் கல்லூரி நண்பர்கள். ஜேசுராசு சமையல் வேலைக்கு சென்று வருகிறார். 

இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு ஜேசுராசு வேலையிலிருந்து வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார். அப்போது, வீட்டுக்குள் அகஸ்டியன் தலையில் பலத்த காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தகவலறிந்த அவிநாசி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணையில் ஈடுபட்டனர். அதில், அகஸ்டியனை, பிரான்சிஸ் வல்லரசு கொலை செய்து விட்டு தப்பியோடியது தெரியவந்தது. 

அகஸ்டியன் கல்லூரி சென்றுவிட்டு பகுதி நேரமாக உணவகத்துக்கு வேலை சென்று வந்தார். இந்நிலையில் உணவகங்களுக்கு செல்லும்போது பிரான்சிஸ் வல்லரசின் தந்தையான ஜேசுராஜை பற்றி தவறாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால், ஜேசுராஜூக்கு வேலை கிடைக்காமல் இருந்தது வந்தது. இதில் ஆத்திரம் அடைந்த பிரான்சிஸ் வல்லரசு, அகஸ்டியனை நேற்று முன் தினம் இரவு இரும்பு ராடால் அடித்து கொலை செய்துள்ளார். இதையடுத்து, தப்பியோடிய பிரான்சிஸ் வல்லரசை அவிநாசி- மங்கலம் சாலையில் வைத்து அவிநாசி போலீஸார் கைது செய்து கோவை மத்திய சிறையில் நேற்று முன்தினம் அடைத்தனர் 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...